அமெரிக்காவில் செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி! – ட்ரம்புக்குப் பெரும் பின்னடைவு

அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில், ஆளும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினரைப் பின்னடைவுக்கு உட்படுத்தி, செனட் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனாதிபதியின் எஞ்சிய ஆட்சிக் காலத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத் தேர்தலில், செனட் சபையில் பெரும்பான்மைக்கு 50 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜனநாயகக் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்று மேலவையைக் கைப்பற்றியுள்ளது. குடியரசுக் கட்சி 41 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அதேபோன்று 435 இடங்களைக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி முன்னிலை வகித்து வருகின்றது.

குடியரசுக் கட்சியின் கோட்டைகளாகக் கருதப்பட்ட டெக்சாஸ், தென் கரோலினா, கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களிலும் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பாகவே இந்த முடிவுகள் பார்க்கப்படுகின்றன.

அமெரிக்காவின் ஓஹியோ மாநில ஆளுநர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி தோல்வியடைந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஏமி ஆக்டன் வெற்றி பெற்று ஆளுநராகத் தேர்வாகியுள்ளார். இதன் மூலம் கடந்த 16 ஆண்டுகளாகக் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த ஆளுநர் பதவியை 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றவும் அவர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் தயாராக இருப்பதாகவும், தான் இந்தத் தேர்தலில் போட்டியிடாததே தோல்விக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜார்ஜியா மாநிலத்தின் ஆளுநர் பதவியை 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி மீண்டும் கைப்பற்றியுள்ளது. குடியரசுக் கட்சியின் பில்லியனர் வேட்பாளர் ரிச் ஜாக்சனை தோற்கடித்து கேஷா லான்ஸ் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் ஆளுநராகும் முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையை அவர் பெறுகின்றார்.

அதேபோன்று நியூ ஹாம்ப்ஷயரில் செனட் சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் கிறிஸ் பாப்பாஸ் 56.7 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்க செனட் தேர்தல் வரலாற்றில் வெற்றி பெற்ற முதல் தன்பாலின ஈர்ப்பாளர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்