
அரசால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் ஆகியவற்றை முழுமையாக மீளப்பெறக் கோரி, மக்கள் போராட்ட இயக்கத்தால் நாடாளுமன்றச் சுற்றுவட்டப் பகுதியில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்ட ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்குச் செல்லும் பிரதான வீதியிலுள்ள பொல்துவ சந்தியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டு அப்பகுதியில் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
எந்தவித திருத்தங்களும் இன்றி இவ்விரு சட்டமூலங்களும் உடனடியாக முழுமையாக மீளப்பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


Views: 14