நெதன்யாகுவே உடனடியாகப் பதவி விலகு! – இஸ்ரேலில் தீவிர மக்கள் போராட்டம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய அரசை அமைக்க வேண்டும் எனக் கோரியும் அந்நாட்டின் 5 முக்கிய நகரங்களில் தீவிர மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி 120 தொகுதிகளில் 53 இடங்களை மட்டுமே கைப்பற்றிப் பெரும்பான்மையை இழந்தது. அதேவேளை, எதிர்க்கட்சிகள் 67 இடங்களுடன் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளன.

நெதன்யாகுவின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் முன்வைக்கும் முதன்மைக் கோரிக்கைகள் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்துள்ள அறுதிப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அரபுச் சமூகக் கட்சிகளின் ஆதரவோடு புதிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களான காடி ஐசென்காட், நாஃப்தாலி பென்னட் மற்றும் யாயிர் லேபிட் ஆகியோர் உடனடியாக ஒன்றிணைந்து யூத – அரபு கூட்டு அரசை உருவாக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘ஸ்டாண்டிங் டுகெதர்’ என்ற மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டங்கள், நாட்டின் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைஃபா, பீர்ஷேபா மற்றும் தய்பே ஆகிய 5 முக்கிய நகரங்களில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு நெதன்யாகுவுக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவாறு பேரணிகளை முன்னெடுத்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

சிறப்புச் செய்திகள்

Related News