மாடு மேய்க்கச் சென்றவர் யானை தாக்கியதில் சாவு! – நெடுங்கேணியில் சோகம்

வவுனியா, நெடுங்கேணி – பெரியமடுப் பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் நெடுங்கேணிப் பகுதியைச் சேர்ந்த சி.கரன் (வயது 45) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் வழக்கம் போல் ஏனைய பண்ணையாளர்களுடன் இணைந்து அந்தப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றபோதே, எதிர்பாராதவிதமாக உலா வந்த ஒற்றை யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, அவருடன் சென்ற ஏனையவர்களால் அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெரியமடு மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக உலா வரும் குறிப்பிட்ட ஒரு ஒற்றை யானையினாலேயே இவ்வாறான கொடூர மனித உயிரிழப்புகள் தொடர்கின்றன என்று பிரதேச மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

கிராமப்புற மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்தக் காட்டு யானையைக் கட்டுப்படுத்தவும், கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனஜீவராசிகள் திணைக்களமும் உரிய அதிகாரிகளும் உடனடியாகத் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்