இலங்கையைப் பின்னுக்குத் தள்ளி 6ஆவது இடத்துக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஆண்கள் ஒருநாள் அணிகள் தரவரிசையில், ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக 6ஆவது இடத்துக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் (ஐசிசி) வெளியிடப்பட்டுள்ள புதிய ஆண்கள் ஒருநாள் அணிகள் தரவரிசைப் பட்டியலில், ஆப்கானிஸ்தான் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன்பு 7ஆவது இடத்தில் இருந்த அந்த அணி, தற்போது இலங்கையைப் பின்னுக்குத் தள்ளி இந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

சமீபத்தில் ராவல்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சம்பியன் பட்டம் வென்றது. இந்தத் தொடரில் இலங்கை அணி தொடர் தோல்விகளைச் சந்தித்தமையால் அதன் தரவரிசைப் புள்ளிகள் குறைந்தன. இதன் காரணமாகவே ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக 6ஆவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

தற்போதைய தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், நியூசிலாந்து 2ஆவது இடத்திலும், தென்னாபிரிக்கா 3ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 4ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா 5ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 6ஆவது இடத்திலும், இலங்கை 7ஆவது இடத்திலும் உள்ளன.

சிறப்புச் செய்திகள்

Related News