எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நான் தயார்! – சபாநாயகர் உறுதியான அறிவிப்பு

தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எந்த வகையிலும் நிராகரிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அது தொடர்பான முறையான நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் மரபுகள் துல்லியமாகப் பின்பற்றப்படும் என்றும் இலங்கை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற மரபுகள், நிலையியற் கட்டளைகள் மற்றும் முறையான நடைமுறைகளைப் பின்பற்றியே இவ்வாறான பிரேரணைகள் கையாளப்பட வேண்டும். எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன்.

எதிர்க்கட்சியினரால் நாடாளுமன்றப் பொதுச்செயலாளரிடம் கையளிக்கப்பட்டு, பின்னர் நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரிக்கப் போவதில்லை.

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றேன். முறையான மற்றும் சரியான வழிமுறைகளைப் பின்பற்றிப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால், அதற்கு அஞ்ச வேண்டிய தேவை எதுவும் இல்லை.

நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு நாட்டின் அரசமைப்பு, நிலையியற் கட்டளைகள், சபாநாயகரின் உத்தரவுகள் மற்றும் மரபுசார் வழிமுறைகள் போன்ற தெளிவான விதிகளும் கட்டமைப்புகளும் உள்ளன.” – என்றார்.

“துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருள் கிடைப்பதில்லை. மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்போம் எனக் கூறிவிட்டு, தற்போது மீண்டும் அதனை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.

பொலன்னறுவை மாவட்டம், பொலன்னறுவைத் தொகுதி, அரலகங்வில வட்டாரத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலங்களால் மக்களின் அடிப்படை உரிமைகள், பேச்சுரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறப்படுகின்றன.

பௌத்த மதத்துக்குரிய சிறப்பிடம் மற்றும் மதத் தலைவர்களின் காவி உடைக்குரிய மரியாதை பாதுகாக்கப்பட வேண்டும். பிக்குகளின் காவி உடையைக் களையச் செய்தமை போன்ற தவறுகளை அரசு செய்துள்ளது.

நெல்லுக்கு ரூ. 150 நிலையான விலை தருவதாகக் கூறிவிட்டு விவசாயிகளை அரசு ஏமாற்றியுள்ளது. உற்பத்திச் செலவுக்கேற்ப நியாயமான விலை கிடைக்காததால் விவசாயக் குடும்பங்கள் நிர்க்கதியில் தவிக்கின்றன.

எதிர்க்கட்சியில் இருந்தபோது அரிசி இறக்குமதியை எதிர்த்தவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்ததும் பல இலட்சம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்து தரகுப் பணம் பெறுகின்றனர்.

நெதர்லாந்து போன்ற நாடுகளின் நவீன தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி, தேசிய விவசாயத் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி ‘ஸ்மார்ட் விவசாயியை’ உருவாக்க வேண்டும்.” – என்றார்.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்