தீபாவளியை முன்னிட்டு மத்திய மாகாணத் தமிழ்ப் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை

மத்திய மாகாணத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட் கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த விசேட வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய மாகாணக் கல்வி அமைச்சால் இந்த விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளித் திருநாள் அமைவதனால், பெருந்தோட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் அதனைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் மத்திய மாகாண ஆளுநர் செயலகத்தால் இந்த விடுமுறை அங்கீகரிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வழங்கப்படும் விடுமுறை நாளுக்குப் பதிலாக, எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமையைப் பதில் பாடசாலை நாளாகக் கருதி பாடசாலைகளை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் ஆளுநர் செயலகம் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்