எதிர்க்கட்சியின் கூச்சல்களுக்கு அரசு ஒருபோதும் அடிபணியாது! – அமைச்சர் நளிந்த பதிலடி

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளின் பிரகாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணையையொன்றை எவ்வாறு சமர்ப்பிப்பது என்றுகூட எதிர்க்கட்சிக்குத் தெரியவில்லை என்றும், நிலையியல் கட்டளைகளுக்கு அமையச் சபாநாயகருக்கு எதிராக முறைப்படியான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தால் அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றும் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:-

“எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபையின் நடுவே திரண்டுவந்து கூச்சலிடுகின்றார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளின் இத்தகைய கூச்சலுக்கு அடிபணிந்து சபை நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் ஒத்திவைக்கப் போவதில்லை.

நிலையியல் கட்டளைகளின்படி சபாநாயகருக்கு எதிராக முறைப்படியான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தால், அதனை விவாதத்துக்கு  எடுத்துக்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம்.

கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே எதிர்க்கட்சியினர் சபையில் கூச்சலிட்டு அமளியில் ஈடுபடுகின்றனர். இவர்களின் இத்தகைய கூச்சல்களுக்கு நாம் ஒருபோதும் அச்சமடையப் போவதில்லை.” – என்றார்.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்