பல்கலைக்கழகங்களில் நாளை பணிப்புறக்கணிப்பு! – ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவிப்பு

அரச பல்கலைக்கழகங்களில் நாளை வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்தப் பணிப்புறக்கணிப்புடன் இணைந்து எதிர்ப்புப் பேரணியொன்றையும் கருத்தரங்கொன்றையும் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் நிலவும் கல்விசார் ஊழியர் பற்றாக்குறை, அதிகரித்துள்ள பணிச்சுமை மற்றும் போதிய பௌதிக வசதிகள் இல்லாமை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்