
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் மூத்த சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க தனது 85 ஆவது வயதில் காலமானார்.
கண்டியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
லால் விஜேநாயக்க, நாட்டின் அரசியல், மனித உரிமைகள் மற்றும் சமூக இயக்கங்களில் பல தசாப்த காலமாகத் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஒரு முன்னணி அரசியல் செயற்பாட்டாளரும் சட்ட வல்லுநருமாவார்.
இடதுசாரி அரசியல் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட அவர், அரசமைப்பு சீர்திருத்தங்கள், ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நீதி ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கை வகுப்பிலும் மற்றும் அதன் நிறைவேற்றுக்குழுவின் முக்கிய தீர்மானங்களை எடுப்பதிலும் அவர் தனது இறுதிக்காலம் வரை தீவிரமாகப் பங்காற்றியிருந்தார்.