ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் போலீசார்!

கொடூரகுற்றவாளி தப்பியோடியதை அடுத்து அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.

தப்பியோடிய கொடூர குற்றவாளி
சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்ற வழக்கில் தண்டனை பெற்றவரும், மனநல காப்பகத்தில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டவருமான கிளிஃபோர்ட் லியான்ஸ்(Clifford Lyons) பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து தப்பியோடியுள்ளார்.

பெர்த் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு பாதுகாப்புகளுடன் அழைத்து செய்யப்பட்ட கிளிஃபோர்ட் லியான்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் பாதுகாப்பாளர்களின் கண்ணில் படாமல் தப்பியோடியுள்ளார்.

கிளிஃபோர்ட் லியான்ஸ் என்ற இவர் கிளிஃபோர்ட் டொப்பி(Clifford Dobbie) என்றும் அழைக்கப்படுகிறார்.

கிளிஃபோர்ட் லியான்ஸ் தப்பியோடியதை அடுத்து அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

இதையடுத்து, அவரை பிடிக்க தேடுதல் வேட்டை ஒன்றை காவல்துறை முன்னெடுத்து வருகிறது. அதிகாரிகள் பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

அதில், கிளிஃபோர்ட் லியான்ஸை பொதுமக்கள் யாரும் பார்த்தால் அவரின் அருகில் செல்ல வேண்டாம் என்றும் உடனடியாக ஸ்காட்லாந்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

காஸ்டேர்ஸ் மாநில மருத்துவமனை மற்றும் கிளாஸ்கோ ரோவன் பேங்க் கிளினிக் ஆகியவற்றில் உள்ள உயர் பாதுகாப்பு மனநல மையங்களில் கிளிஃபோர்ட் லியான்ஸ் கடந்த பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

1990ம் ஆண்டு 12 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்து இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே இருந்த போது 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.

சிறப்புச் செய்திகள்

Related News