அரசாங்கத்திற்கு எதிராக அனுராதபுரத்தில் களமிறங்கும் மொட்டுக்கட்சி

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நாளை (12) அனுராதபுரத்தில் “ஜனசதன” மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக, SLPP தேசிய அமைப்பாளர் டி.வி. சாணக்க தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 மகிந்த ராஜபக்ச

மேலும், அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பதும் இந்தப் பேரணியின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேரணி சனிக்கிழமை (12) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்புச் செய்திகள்

Related News