முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை அவரது மனைவி சங்கீதா திரும்ப பெற்றுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் – சங்கீதா
விஜய் – சங்கீதா தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கணவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த குடும்ப நல நீதிமன்றம், இரு தரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முதலில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.ஆனால், அன்றைய தினம் இருவரும் ஆஜராகாததால், வழக்கு ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
ஜூன் 15ஆம் தேதியன்றும் இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, இருவரும் பிரபலங்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, காணொளி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையைத் தொடர்ந்து, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளதால், அவரால் விவாகரத்து வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.