அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாண அணி இரண்டாம் இடம்!

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற மாணவர் அணி, இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

அகில இலங்கை கணிதப் போட்டி – 2026 இன் சிரேஷ்ட பிரிவு 2 (தரம் 12, 13) இற்கான  போட்டி நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற அணியே இந்த வென்றியைச் சுவீகரித்துள்ளது.

வடக்கு மாகாண அணியில் பின்வரும் முன்னணிப் பாடசாலைகளின் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

  • யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி: எஸ். அட்சயன், ஆர். பிரவீன், வை. திவனுஜன், ரி. சுவர்மன், எஸ். பிரவீனன்
  • சாவகச்சேரி இந்துக் கல்லூரி: ஜி. ஷாந்தித்யன்
  • கொக்குவில் இந்துக் கல்லூரி: ஆர். விதுர்சன்
  • ஹாட்லிக் கல்லூரி: கே. கஜலக்சன்

தேசிய மட்டத்தில் வடக்கு மாகாணத்துக்குப் பெருமை தேடித்தந்த இந்த மாணவர்களுக்குப் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்