தமிழரசுக்கட்சியின் அரசியல் பழிவாங்கலே என்மீதான வழக்கு: மணிவண்ணன்!

108 0

எனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மற்றொரு அரசியல் பழிவாங்கல் என யாழ். மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்தியதாக எனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மற்றொரு அரசியல் பழிவாங்கல் செயற்பாடு ஆகும்.

எனக்கெதிரான குறித்த வழக்கேட்டின் பிரதி தமிழரசுக் கட்சியின் வட.மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி சயந்தனால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தழிழர் விரோத சக்திகளுடன் கூட்டிணைந்துள்ள அக்கட்சி எனக்கும் என்சார் கட்சிக்கும் எதிராக எடுக்கக்கூடிய இத்தகைய நடவடிக்கைகள் நாம் மிகச் சரியான திசையிலேயே பயணிக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

எனினும் எமக்கெதிராக இவர்கள் எடுத்துக்கொண்டுள்ள ஆயுதம் மிகப் பலவீனமானது என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தும்.

கடந்த காலங்களிலும் நேர்மையாக செயற்பட்ட வீ.நவரட்ணம் போன்றவர்களுக்கெதிராக இவ்வாறான செயற்பாடுகளை தமிழரசுக் கட்சி செய்துள்ளது.

ஈற்றில் அது எங்கு சென்று முடிந்தது என்ற வரலாற்று பாடத்தை அவர்கள் கற்க மறுக்கின்றனர்” என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

சபாநாயகருக்கு 10 வருட சிறைத்தண்டனை

Posted by - November 8, 2018 0
தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் கொழும்பு 7 மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளது. ஆரம்பத்தில் மஹிந்த…

தமிழ் அரசு கட்சியிலிருந்து வெளியேறிய சீ.வீ. விக்னேஸ்வரன்

Posted by - November 9, 2018 0
வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகுவதாக எழுத்து மூல அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் ஒப்படைத்துள்ளார்.…

இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஐ.ம.சு.மு. ஆதரவு வழங்க தீர்மானம்

Posted by - December 21, 2018 0
விசேடமாக மக்களுக்கு எதிரான பிரேரணைகள் எதுவும் காணப்படாது போனால் அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரும் இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர…

சுற்றுலாவை மேம்படுத்த தாய்லாந்தில் விசா கட்டணம் 2 மாதங்களுக்கு ரத்து

Posted by - November 7, 2018 0
தாய்லாந்து அரசு சுற்றுலாவை மேம்படுத்த உடனடி விசா கட்டணத்தை இரு மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது. தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அள்வில் வருகை தருகின்றனர். கடந்த…

மோடியிடம் – மன்னிப்பு கோரினார் பிரதமர் ரணில்

Posted by - October 21, 2018 0
இரு நாடுகளினதும் இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலங்கை அரசாங்கம் தாமதப்படுத்தி வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்திய தலைநகர் புதுடெல்லியில்…