படையினருக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் – இலங்கையே விசாரிக்க வேண்டும்

199 0

இலங்கை படையினருக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச தலையீடு அவசியம் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பின்னர் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் 2015 இல் பதவியேற்ற பின்னர் ஜனநாயகத்தை மீள ஏற்படுத்தியுள்ளது.நீதித்துறை உட்பட பொது ஸ்தாபனங்களின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நல்லிணக்கம் உட்பட யுத்தம் சம்பந்தமான விடயங்களிற்கு பெருமளவிற்கு தீர்வை கண்டுள்ளது.

படையினரிடமிருந்த பொதுமக்களின் நிலங்களை பொதுமக்களிடம் மீள கையளிக்கப்பட்டு உள்ளது.

அதேவேளை இந்த விடயத்தில் தேசிய பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. என்ற விடயங்களை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு உதவிகளை வரவேற்பதாக தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கையின் நீதித்துறையே விசாரணை செய்வது சிறந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு நடவடிக்கைகளை பார்வையிடலாம் எனவும் தெரிவித்துள்ள பிரதமர் ஜெனீவா தீர்மானத்திற்கு அமைய மனித உரிமை பேரவையின் அமர்வுகளிற்கு அறிக்கைகளை சமர்பித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Post

கொழும்பில் பெரும் பதற்றம்! அரச ஊடகங்களுக்குள் வன்முறை

Posted by - December 13, 2018 0
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், கொழும்பின் பல பகுதிகளில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரச ஊடகங்களுக்குள் ஐக்கிய தேசிய கட்சியின்…

தகுதி, திறமை கொண்டவர்கள் அமெரிக்காவுக்கு வரலாம்- டொனால்ட் டிரம்ப்

Posted by - October 16, 2018 0
அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் ஐ.டி. துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ஏராளமான இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல பல்வேறு நாட்டினரும்…

ஜனாதிபதி, பிரதமருக்கு வெளிநாட்டுத் தடை இல்லை

Posted by - November 21, 2018 0
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான வெளிநாட்டுப் பயணத் தடை எதுவும் விதிக்கப்படாது என்றும் அது தொடர்பில் சர்வதேச ரீதியில் எந்தவொரு பேச்சு வார்த்தையும் இடம்பெறவில்லையெனவும் வெளிநாட்டு தூதரக வட்டாரங்கள்…

உலகில் சர்வாதிகார ஜனாதிபதி கூட இப்படி நடந்து கொண்டதில்லை

Posted by - November 10, 2018 0
ஜனாதிபதி முறைமையில் காணப்படும் அதிகாரத்தை குறைப்பதாக தெரிவித்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று எம்முடன் இணைந்து கடந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாகவும், ஆனால், இன்று அரசியல் அமைப்பில் இல்லாத…

வேலைநிறுத்த போராட்டம் திடீரென எடுத்த முடிவல்ல

Posted by - December 10, 2018 0
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் திடீரென எடுத்த முடிவு அல்லவென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…