இலங்கைக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!!

64 0

உலகின் பலமான கடவுச் சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.

பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்தளதினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலுக்கு அமைய இலங்கையின் கடவுச்சீட்டுக்கு 83 ஈவது இடம் கிடைத்துள்ளது.

இலங்கை கடவுச்சீட்டை வைத்துள்ள நபர் ஒருவர் விசா இன்றி உலகின் 47 நாடுகளுக்கு பயணிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

குறித்த நாடுகளுக்குச் சென்ற பின்னர் விசா பெற்றுக் கொள்ளும் வசதி 30 நாடுகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கடவுச்சீட்டு கொண்டவர்கள் ஏனைய 151 நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வதற்கு விசா விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய தரப்படுத்தலுக்கு அமைய முதலிடத்தை சிங்கப்பூர் மற்றும் ஜேர்மன் பெற்றுள்ளன. 165 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது குறித்த நாடுகளுக்கு சென்ற பின்னர் விசா பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

டென்மார்க், சுவீடன், பின்லாந்து, லக்சம்பெர்க், இத்தாலி, பிரான்ஸ், நோர்வே, நெதர்லாந்து, ஸ்பெய்ன், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு கொண்டவர்கள் 164 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கும் வாய்ப்பு உள்ளதாக இன்டெக்ஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

Related Post

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: தாக்குதல் நடத்தியவர் சரண்

Posted by - October 29, 2018 0
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் இரவு, யூதர்களின் வழிபாட்டு தலத்துக்குள் நுழைந்த நபர், சரமாரியாக சுட்டதில், 11 பேர் உயிர் இழந்தனர்; நான்கு போலீசார் உட்பட,…

ஐக்கிய தேசிய கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பொறுப்பு

Posted by - November 4, 2018 0
எதிர்வரும் சில தினங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாக கலாசார விவகார, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர்…

ஐ.தே.க உறுப்பினருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

Posted by - December 4, 2018 0
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை ஒன்றை விடுத்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் தௌிவு படுத்துவதற்காக டிசம்பர் 7 ஆம்…

நவராத்திரி வழிபாட்டுக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

Posted by - October 15, 2018 0
இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் லொறி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சத்தீஷ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச்…

மைத்­தி­ரி­யின் அற்ப ஆசையே நெருக்­கடி நிலைக்கு கார­ணம்

Posted by - November 25, 2018 0
அரச தலை­வ­ரின் அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி நாட்­டில் சர்­வா­தி­கா­ரத்தை உரு­வாக்­க­வும் இரண்­டா­வது முறை­யாக அரச தலை­வ­ரா­க­வும் அற்ப ஆசை­யி­லேயே நாட்­டில் இவ்­வா­றான நெருக்­கடி நிலையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன…