தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மஹிந்தவிடம் வழங்கப்பட வேண்டும்

106 0

அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இடைக்கால அரசாங்கமொன்றை நிறுவும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், அவ்வாறு தீர்மானம் எடுத்தால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் போது எவ்வாறு செயற்படுவது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related Post

வவுனியா நகரசபை அமர்வு

Posted by - November 28, 2018 0
வவுனியா நகரசபை அமர்வு தலைவர் இ. கௌதமன் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்ட இன்றைய அமர்வில்…

கலிபோர்னிய காட்டுத்தீயில் சிக்கி ஐவர் பலி

Posted by - November 10, 2018 0
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதோடு, 150,000க்கும் அதிகமானோர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட…

முதலாவது ஆட்டத்தில் ஜனாதிபதி தோல்வி

Posted by - November 10, 2018 0
ஜனாதிபதியினதும் சட்ட முரணான பிரதமரினதும் முதலாவது ஆட்டமே தோல்வியில் முடிவடைந்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (09) நள்ளிரவு அலரி மாளிகையில் இடம்பெற்ற…

புலிகளோடு புலியாக இருந்த இணுவையூர் சிதம்பரச்செந்திநாதன் மறைந்தார்

Posted by - October 17, 2018 0
தமிழீழ மண்ணினதும் மக்களினதும் அசைவியக்கத்தை… போரின் பதிவுகளை இலக்கியமாக வடித்த ‘இணுவையூர் சிதம்பரச்செந்திநாதன்’ காலம் ஆனார். இவருக்கு அகவை 66. கடந்த 46 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்துக்கு…

புதிய கூட்டணியை அமைத்து, ஜனாதிபதியையும், அவரது உத்தரவுகளையும் தோற்கடிப்போம்

Posted by - November 10, 2018 0
ஜனநாயகத்தை நேசிக்கும் அத்தனை சக்திகளையும் இணைத்துக் கொண்டு புதிய கூட்டணியை அமைத்து, ஜனாதிபதியையும், அவரது உத்தரவுகளையும் தோல்வியடையச் செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்பின்…