யாழில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

365 0

ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம், மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 12.00 மணியளவில் வாள்களுடன் முகத்தை துணியினால் முற்றாக மூடியவாறு சுமார் பத்துக்கும் அதிகமானவர் மதில் பாய்ந்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

வீட்டின் யன்னல் ஊடாக வாள்களை காட்டி கதவைத் திறக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர்.

இதன்போது வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட கதவினை உடைத்துக்கொண்டு குறித்த கும்பல் உள்நுழைந்துள்ளது.

ஆறு பேர் வீட்டிற்குள் நுழைந்து வாள்களை காட்டி அச்சுறுத்தி தாலிக்கொடி உட்பட சுமார் 18 பவுண் நகைகள், 4000 ரூபா ரொக்கப்பணம் என்பவற்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம் வரை வீட்டில் நின்ற கொள்ளையர்கள் கூக்குரல் கேட்டு வந்த அயலவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.

இக்கொள்ளை தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குப் பின் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Post

கூட்­ட­மைப்பு எம்.பி. ஒரு­வர் என்னை அடிக்­கடி விமர்­சிக்­கின்­றார் – முத­ல­மைச்

Posted by - October 1, 2018 0
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் என்னை அடிக்­கடி விமர்­சிக்­கின்­றார். நான் முரண்­பாட்டு அர­சி­ய­லைத் தொடர விரும்ப ­வில்லை. இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர்…

பெரும்பான்மையினரின் உரிமைகளை மட்டும் பாதுகாப்பது ஜனநாயகமல்ல

Posted by - December 15, 2018 0
பெரும்பான்மை ஆதரவு, சிறுபான்மை ஆதரவு என்ற சொற்பதங்கள் இன்று காலம் கடந்தவை ஆகியுள்ளன. சர்வதேச சட்ட சொற்பதங்களின் பட்டியலில் இவை பெறுமதி இழந்த பதங்களாகவே கணிக்கப்படுகின்றன. ஜனநாயகம்…

கோத்தாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted by - October 9, 2018 0
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன்…

நள்ளிரவில் ரணிலை சந்தித்த றிசாத் – அமீர் அலியும் கூடச்சென்றார்

Posted by - October 27, 2018 0
கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்களுக்கு மத்தியில் றிசாத் பதியுதீன் ரணில் விக்கிரமசிங்கவை மிக அவசரமாக கொழும்பில் சந்தித்துள்ளார். இச்சந்திப்பில் அமீர் அலியும் கலந்து கொண்டுள்ளார்.

அம்பலமானது மைத்திரியின் இரகசியம்

Posted by - November 11, 2018 0
புலனாய்வுத் தகவல்கள் சிலவற்றின் அடிப்படையிலேயே ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்தார் என்று அரசாங்க உள்ளக தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும், மஹிந்த ராஜபக்சவைத்…