இலங்கையருக்கு ஆபத்தானதாக அமையும் அடுத்தவருடம்

206 0

இலங்­கை­யர்­க­ளுக்கு அடுத்த ஆண்டு மிக­வும் மோச­மான ஆண்­டாக அமை­ய­வுள்­ள­தாக சுகா­தார அமைச்­ச­ரும், அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்­தார்.

நுவ­ரெ­லியா மாவட்ட மருத்­து­வர்­கள் மற்­றும் தாதி­யர் களுக்­கான விடு­தி­க­ளைக் கைய­ளிக்­கும் நிகழ்வு நேற்று நடை­பெற்­ற­போது கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அடுத்த ஆண்டு இலங்­கை­யின் வர­லாற்­றில் மிக­வும் மேச­மான ஆண்­டாக அமை­வுள்­ளது. கார­ணம் 2019ஆம் ஆண்­டி­லேயே நாம் அதி­க­ள­வான கடன்­க­ளைச் செலுத்த வேண்­டிய சூழ­லுக்­குள் தள்­ளப்­பட்­டுள்­ளோம்.

நாம் அனைத்­துக் கடன்­க­ளை­யும் மையப்­ப­டுத்­தியே ஒவ்­வொரு வரவு –செல­வுத் திட்­டத்­தை­யும் தயா­ரித்து வந்­தோம். எமது அரசு ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­தன் பின்­னர் முத­லா­வது வரவு – செல­வுத் திட்­டத்­தின் போது பல்­வேறு உத­வித்­திட்­டங்­க­ளை­யும், சம்­பள அதி­க­ரிப்­புக்­க­ளை­யும் வழங்­கி­யுள்­ளோம்.
கடன்­களை மீளச்­செ­லுத்­து­மாறு பல்­வேறு தரப்­புக்­க­ளி­டத்­தி­லி­ருந்­தும் எமக்கு கோரிக்­கை­கள் விடுக்­கப்­பட்­டன.

அத­னைத் தொடர்ந்து ஆராய்ந்து பார்த்­த­போது கடந்த அரசு பன்­னாட்டு நாணய நிதி­யம் மற்­றும் உலக வங்கி ஆகி­ய­வற்­றுக்­குத் தெரி­யாது மிக­வும் சூட்­சு­ம­மாக வங்­கி­கள் ஊடா­கப் பெருந்­தொ­கை­யான கடன்­க­ளைப் பெற்­றுள்­ளது.

கடன்­பெற்­றுள்­ள­மை­யா­னது நேர­டி­யாக திறை­சே­ரிக்கு வரு­வ­தில்லை. வங்­க­ளின் பிர­கா­ரம் பெற்ற கடன்­க­ளா­கவே கணிக்­கப்­ப­டு­கின்­றது. அரச வங்­கி­க­ளின் மூல­மா­கப் பெறப்­பட்ட கடன்­களை மீளச் செலுத்­தாது விட்­டால் சகல வங்­கி­க­ளும் இழுத்து மூட­வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட்டு விடு­வோம்.

லலித் கொத்­த­லா­வ­ல­வின் வங்­கிக்கு நடந்­த­தைப்­போன்று தான் ஏனைய வங்­கி­க­ளுக்­கும் நடக்க வேண்­டிய ஆபத்­துள்­ளது. நேர்­வ­ழி­யிலோ அல்­லது திருட்­டு­வ­ழி­யிலோ கடன்­களை யார் பெற்­றி­ருந்­தா­லும் எமது மக்­க­ளுக்­காக நாம் மீளச் செலுத்த வேண்டி நிலைக்­குள் தள்­ளப்­பட்­டுள்­ளோம் -– என்­றார்.

Related Post

ஆறு இந்திய மீனவர்கள் கைது

Posted by - October 23, 2018 0
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். தமிழகம் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆறு…

கைதிகளின் போராட்டத்தை பொறுப்பேற்ற அரசியல், சிவில் சமூகத்தினர்

Posted by - October 13, 2018 0
தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தைச் சிவில் அமைப்பினரும் அரசியல் தலைவர்களும் பொறுப்பேற்று, கைதிகளைப் போராட்டத்தைக் கைவிடுமாறு கோருவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று…

1000 ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாவிட்டால் அரசுடன் பேச தமிழ் முற்போக்கு கூட்டணி தயார்

Posted by - October 15, 2018 0
தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் 1000 ரூபாவை அடிப்படை சம்பளமாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களால் பெற்றுகொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தோடு சம்பள விடயத்தை பேசுவதற்கு தமிழ் முற்போக்கு…

அணு ஆலைகளுக்கு எதிராக களம் இறங்கும் பிரெஞ்சு மக்கள்!

Posted by - October 29, 2018 0
அணு ஆலைகளுக்கு எதிராக பிரெஞ்சு மக்களின் எதிர்ப்பு படிப்படியாக அதிகரித்து வருவதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பிரான்சில் 53 வீதமான மக்கள் (பாதிக்கும் மேல்..)…

நாலக டி சில்வா, மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்

Posted by - October 19, 2018 0
முன்னாள் பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இரண்டாவது நாளாகவும் இன்று (19.10.18) வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர்…