உறுதிப்படுத்தாத செய்தியை அனுப்பிய முதலமைச்சர்

240 0

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன், தனக்குக் கிடைத்த செய்­தியை உறு­திப்­ப­டுத்­தா­மல், அதன் உண்­மைத் தன்­மையை ஆரா­யா­மல், எதிர்க்­கட்­சித் தலை­வர் மற்­றும் அமைச்­சர்­க­ளுக்கு அனுப்­பி­யுள்­ளார்.

இத­னால் எதிர்க்­கட்­சித் தலை­வர் தவ­ரா­சா­வி­டம் அவர் முறை­யாக வாங்­கிக் கட்­டி­யுள்­ளார்.

இணை­யத்­த­ளத்­தில், வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் மகன் தொடர்­பான செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது. அந்­தச் செய்­தியை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர், வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வ­ருக்­கும், அமைச்­சர்­க­ளுக்­கும், அவைத் தலை­வ­ருக்­கும் அனுப்பி வைத்­துள்­ளார்.

இது தொடர்­பில் வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா, வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு மின்­னஞ்­சல் அனுப்­பி­யுள்­ளார்.
அதில் தெரி­வித்­துள்­ள­தா­வது:

யாழ்ப்­பா­ணம் வர்த்­தக நிலை­யத்­தில் திருட்டு, வடக்கு மாகாண சபை முக்­கிய பிர­மு­க­ரின் மக­னும் சிக்­கி­னார் என்ற தலைப்­பில் இணை­யத்­த­ளத்­தில் வெளி­யான செய்­தியை எனக்­கும் வடக்கு மாகாண அமைச்­சர்­கள், அவைத் தலை­வ­ருக்­கும் மின்­னஞ்­ச­லில் அனுப்­பி­ய­தற்கு எனது நன்­றி­கள்.

வடக்கு மாகாண சபை­யின் நிறை­வேற்­றுச் செயற்­பா­டு­க­ளில்­தான் தாங்­கள் திறம்­பட, ஆக்­க­பூர்­வ­மாக விட­யங்­களை விளங்­கிச் செயற்­படாத் தன்மை இருக்­கின்­றது என்று நான் இது­வரை தங்­க­ளைப் புரிந்து கொண்­டேன்.

ஆனால் அந்த விட­யப் பரப்­புக்­க­ளுக்கு அப்­பா­லும் அதே வடி­வில் தான் செயற்­ப­டு­கி­றீர்­கள் என்­பதை மேற்­ப­டிச் செய்­தியை அனுப்­பி­ய­தன் மூலம் உணர்­கின்­றேன்.

தங்­கள் ஊது­கு­ழல் இணை­யத்­த­ளத்­தில் ஒரு செய்­தியை வர­வைத்து அதைப் பரப்பி அர­சி­யல் லாபம் தேடும் தங்­கள் நோக்­கத்­தை­யிட்டு நான் பரி­தாப்­ப­டு­கின்­றேன். எனது மக­னுக்கு 26 வயது. அவர் அர­சி­யல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டு­ப­வரோ அல்­லது மாகாண சபை­யில் நான் அங்­கம் வகிப்­ப­தன் மூலம் ஏதா­வது நன்மை பெற்­ற­வரோ அல்­லர்.

அவ­ரது நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் எனக்­கும் எந்­தச் சம்­பந்­த­மும் இல்லை. அவர் தனித்­து­வ­மா­ன­வர் என்று கூறி நான் தப்ப எண்­ணு­கின்­றேன் என்று கருதவேண்­டாம்.

ஒரு­வ­ரின் தனிப்­பட்ட விட­யங்­க­ளையோ அல்­லது அவ­ரின் குடும்ப அங்­கத்­த­வர்­க­ளின் விட­யங்­க­ளையோ அர­சி­யல் ஆதா­யத்­துக்­கா­கப் பயன்­ப­டுத்­து­வது அர­சி­யல் நாக­ரி­கம் அல்ல.

அதன் அடிப்­ப­டை­யில்­தான் உங்­கள் குடும்ப விட­யங்­கள் பல­வற்­றை­யும், தங்­க­ளது வீட்­டில் தற்­போது நடக்­கும் விட­யங்­க­ளைப் பலர் எமக்கு எடுத்­துக் கூறி­ய­தோடு, சபை­யில் பேசு­மா­றும் வேண்­டி­ய­போது நான் அவ்­வா­றான அநா­க­ரிக அர­சி­ய­லைச் செய்ய விரும்­பா­மை­யால் அவை பற்­றிப் பேசு­வ­தில்லை. இனி­மே­லும் பேச போவ­து­மில்லை.

தங்­கள் ஊது­கு­ழல் இணை­யத்­தில் வெளி­யான விட­யத்­துக்கு வரு­கின்­றேன். அதில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­களைப் பிழை­யென என்­னால் நிரூ­பிக்க முடி­யும். தனிப்­பட்ட முறை­யில் நிரூ­பிக்­கா­மல் பகி­ரங்­க­மா­கவே நிரூ­பிக்­கத் தயா­ராக உள்­ளேன்.

ஏற்­க­னவே மாகாண சபை­யின் கடந்த 5 ஆண்டு செயற்­பாட்­டில் நடை­பெற்ற ஊழல்­கள், செயற்­பாட்­டுத் திறன்­னின்மை, அதி­கார முறை­கேடு, அசட்­டை­யீ­ன­மான நிறை­வேற்­றுச் செயற்­பா­டு­கள் போன்­ற­வற்றைப் பகி­ரங்­க­மாக விவா­திப்­ப­தற்­கு­ தங்­களை வரு­மாறு பல தட­வை­கள் நான் அழைத்­தி­ருந்­தேன்.

தாங்­கள் வெளிப்­ப­டைத் தன்­மை­யைப் பேணு­வ­தாகக் கூறு­வது உண்­மை­யா­னால், அதே­போல் தங்­கள் கூற்­றுக்­கள் உண்­மை­யா­ன­தும் நேர்­மை­யா­ன­து­மா­னால், இந்த விட­யம் உள்­ள­டங்­க­ளாக வடக்கு மாகாண சபை­யின் செயற்­பாடு தொடர்­பில் ஒரு பகி­ரங்க விவா­தத்­துக்கு வரவேண்­டும் என்று மீண்­டும் சவால் விடு­கின்­றேன்.

அதே­நே­ரம் தாங்­கள் அனுப்­பிய செய்­தி­யைத் திசை திருப்­பு­வ­தாகக் கரு­தி­னால், அந்த விட­யத்தை முத­லில் விவா­தித்து அதன் பின்­னர் ஏனைய விட­யத்­துக்­குள் செல்­ல­வும் நான் முழு­மை­யான சம்­ம­தத்­தைத் தெரி­விக்­கின்­றேன். தங்­க­ளி­ட­மி­ருந்து இதற்கு உறு­தி­யான பதிலை எதிர்­பார்க்­கின்­றேன் – என்­றுள்­ளது.

Related Post

சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழப்பு

Posted by - November 9, 2018 0
நாட்டில் நிலவும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 13 மாவட்டங்களைச் சேர்ந்த 27,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம்…

இனப்பிரச்சினைத் தீர்விற்கு தமிழ்க் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை: பிரதமர் ரணில்

Posted by - September 23, 2018 0
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான யோசனைகளுக்கு தமிழ்க் கட்சிகளின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

யாழ் மாநகரமுதல்வர்- பின்லாந்து உயர்ஸ்தானிகர் விசேடசந்திப்பு.

Posted by - October 9, 2018 0
யாழ் மாநகரமுதல்வருக்கும் – இலங்கைக்கான பின்லாந்துநாட்டின் அரச உயர்ஸ்தானிகர் ஹரி காமாராயினன் தலைமையிலான குழுவினருக்குமிடையில் விசேடசந்திப்பு ஒன்று கடந்த  4 ஆம் திகதி மாநகரமுதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.…

தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஓய்வூதியம்இழப்பு

Posted by - November 11, 2018 0
ஐந்து வருடம் நிறைவடையா நாடாளுமன்ற கலைப்பினால் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஓய்வூதியம் இழந்துள்ளனர். நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. இதற்கமைய காதர் மஸ்தான், எம்.…

இந்தோனேசியாவில் சுனாமி – 20 பேர் பலி

Posted by - December 23, 2018 0
இந்தோனேசியாவின் Sunda Strait சுற்றிய கடற்கரைகளைச் சுனாமி தாக்கியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 165 காயமுற்றுள்ளதாகவும் அந்நாட்டு அரசு…