தடுப்பு காவலில் ‘இன்டர்போல்’ தலைவர்

202 0

மாயமானதாக கூறப்பட்ட, ‘இன்டர்போல்’ எனப்படும், சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவர், மெங் ஹாங்வே, சீனாவில், தடுப்புக்காவலில் உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சை தலைமையிடமாக வைத்து, இன்டர்போல் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக சீனாவைச் சேர்ந்த, மெங் ஹாங்வே செயல்பட்டு வருகிறார். இவர் சீனாவின், மக்கள் பாதுகாப்பு துறை, துணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். பிரான்சின் லியான்ஸ் நகரில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தன் கணவரை, செப்., 29 முதல் காணவில்லை, என, ஹாங்வேயின் மனைவி, பிரான்ஸ் போலீசில் புகார் செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹாங்வேயை, பிரான்ஸ் போலீசார் தேடி வந்தனர்.விசாரணையில், மெங்க் ஹாங்வே, கடந்த மாதம், ௨௯ல், சீனா சென்றதும், அதன் பின் அவரை காணவில்லை எனபதும், தெரிய வந்தது.

இந்நிலையில், சீன நாளிதழ் ஒன்றில், ‘இன்டர்போல் தலைவர், மெங் ஹாங்வேவை,விசாரணைக்காக சீன போலீசார், தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். கடந்த, ௨௯ல், அவர், சீனா வந்தவுடன், ஒழுங்குமுறை அதிகாரிகளால், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் எதற்காக, எந்த இடத்தில் விசாரணை நடக்கிறது என்ற விபரம் வெளியாகவில்லை.இது பற்றி, சீன அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

Related Post

வன்முறை தீவிரமடைந்ததால் பாகிஸ்தானை விட்டு வெளியேறும் ஆசியா

Posted by - November 3, 2018 0
பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீவி அந்நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசியாவின் விடுதலையை எதிர்த்து மதவாதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள…

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை கூடும்

Posted by - October 31, 2018 0
பாராளுமன்றத்தை வெள்ளிக்கிழமை கூட்டும் தனது தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவிப்பதாக கட்சி தலைவர்களிடம் சபாநாயகர் உறுதியளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில்  கட்சித்…

மூவரை பலி கொண்ட போதையில் வாகனம் செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்

Posted by - December 10, 2018 0
நேற்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற மூவர் பலியான விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட போதையில் வாகனம் செலுத்திய நபருக்கு எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை…

விபத்தில் மாணவி உட்பட மூவர் படுகாயம்

Posted by - December 7, 2018 0
யாழ்.சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவிலடிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் க.பொ. த. சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த…

வியாழேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் – கட்சி வைத்த ஆப்பு

Posted by - November 3, 2018 0
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் தம்மையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) நிர்வாகச் செயலாளர்…