ராமேஸ்வரம் கோவிலில் மழைநீர் புகுந்தது.

193 0

தமிழகம் முழுவதும் நேற்று இரவு மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அவ்வாறு கனமழை பெய்த இடங்களில் ராமேஸ்வரமும் ஒன்றாகும். வெகுநாட்களாக ராமேஸ்வரம் நகரில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தூர் வாரபடாமல் இருந்துள்ளது.

நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இடியுடன் கூடிய பலத்ஹ மழை பெய்தது. பெருக்கெடுத்து ஓடிய மழை நீருடன் தூர்வாரப்படாமல் இருந்த கழிவுநீரும் கலந்து தெருக்களில் ஓடியது. ஊரெங்கும் கழிவு நீர் நிரம்பி கடும் துர்நாற்றமும் வீசியது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

ராமேஸ்வரம் நகரில் உள்ள ராமநாதசாமி கோவிலை சுற்றி உள்ள வடக்கு மற்றும் கிழக்கு சன்னிதி தெருக்களில் கழிவு நீருடன் கலந்த மழை நீர் கோவில் கிழக்கு கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் புகுந்தது. அங்கிருந்த பக்தர்கள் இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவில் ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும்பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தண்ணீர் தொடர்ந்து உள்ளே புகுந்த வண்ணம் இருந்தது. அதனால் பக்தர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ராமேஸ்வரம் கோவிலில் இது போல தண்ணிர் புகும் சம்பவம் அடிக்கடி நிகழ்வதாகவும் அரசு மற்றும் கோவில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் ஊர் மக்கள் கூறி உள்ளனர்.

Related Post

விவசாயத்துறையில் 5 வருட விசா; 500 தாதியரை அனுப்ப ஏற்பாடு

Posted by - October 15, 2018 0
விவசாயத் துறையில் இலங்கையர்களுக்கு ஐந்து வருட விசா வழங்க இஸ்ரேல் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் சென்றுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார இது…

சிறிசேன – மஹிந்த தலைமையிலான கூட்டம் ஆரம்பம்

Posted by - December 14, 2018 0
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. பரபரப்பான அரசியல்…

ஆற்றில் நீராடிய மூவர் மரணம்

Posted by - November 10, 2018 0
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கற்கும் இணுவிலைச் சேர்ந்த செல்வரட்ணம் திஷாந்தன் உட்பட மேலும் இருவர் இன்று மதியம் ஆற்றில் நீராடச் சென்றவேளை காலமானார்கள். இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என…

தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிரான மனுக்களின் மீதான முடிவு இன்று

Posted by - November 13, 2018 0
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான விசாரணையின் முடிவு இன்று (13) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்…

சிறுபான்மையினர் என்னை எதிர்ப்பதற்கு எந்தவித நியாயமும் இல்லை

Posted by - October 20, 2018 0
சிறுபான்மையினர் எனக்கு எதிராக செயற்பட எந்தவித நியாயமும் இல்லையென, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியான, சிறுபான்மையினரின் நம்பிக்கையை வென்ற ஒருவரே ஜனாதிபதி…