வடக்கு கிழக்கில் என்றுமில்லாதவாறு போதைப்பொருள் பாவனை

95 0

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 30 வருட கால யுத்தத்திற்கு பின்னர் என்றுமில்லாதவாறு அதிகளவில் போதைப் பொருள் பாவனை அந்த மக்களை ஆதிக்கம் செலுத்துவதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு நேற்று அதிபர் பவானி ரகுநாதன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்கு பகுதிகளில் போதைப் பொருளை ஒழிப்பதற்கும், தடுப்பதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்கள் சபைக் கூட்டங்களில் தடுமாறுகின்றனர்.

இந்த பாவனை வடக்கில் அத்தியவசிய உணவு போல் பழகிவிட்டது. மலையக மக்கள் எவ்வாறு கோதுமை மாவில் ரொட்டியை ஆரம்ப உணவாக உட்கொள்கிறார்களோ அதேபோல் வடக்கில் கஞ்சாவின் பாவனை அதிகரித்துள்ளது.

இதேபோல் மலையகத்திலும் இவ்வாறான நிலை உருவாகும் என அச்சமாக உள்ளது. போதைபொருளின் பாவனை மலையகத்தில் அதிகரித்து விட்டால் போதைபொருள் பழக்கத்திலிருந்து மலையகத்தை மீட்டெடுப்பது பாரிய கஷ்டமாகும்.

இதேபோன்று பதுளையில் போதைபொருள் பாவனை ஆரம்பமாகியுள்ளது. இதில் ஆண் பிள்ளைகள் மட்டுமில்லாமல் பெண் பிள்ளைகளும் போதைபொருளுக்கு அடிமையாகியுள்ளனர். பதுளையில் உள்ள பிரபல பாடசாலைகளில் இவ்வாறான போதைப்பொருள் பாவனை காணப்படுவதாக அறிந்தேன்.

இதனால் பாடசாலையில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி தொடர்பிலும், அவர்களின் நடவடிக்கை தொடர்பிலும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வதற்கு நாம் ஒருபோதும் துணையாக இருக்க கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post

ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி புதிய மக்கள் ஆணையை பெறமுடியுமா?

Posted by - November 23, 2018 0
தங்கத்தை உரை கல்லால் உரசிப்பார்ப்பது போல், மக்களிடம் சென்று வாக்குக் கோரி, அக்டோபர் 26 க்கு பிறகு தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியானவையா, அவற்றுக்கு இந்நாட்டு மக்கள்…

போர்க்­குற்றம்- மைத்­தி­ரி­யே முதல் சாட்­சி­ய­ம­ளிக்­க­ வேண்­டும்

Posted by - October 1, 2018 0
போரின் இறுதி வாரங்­க­ளில் நடந்­தது தனக்­குத் தெரி­யும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருப்­ப­தால், உண்­மை­யைக் கண்­ட­றி­யும் ஆணைக் குழு முன்­பாக அவரே முத­லா­வ­தாக சாட்­சி­ய­ம­ளிக்­க­வேண்­டும்…

புதிய அமைச்சரவையில் 30 பேர்

Posted by - October 28, 2018 0
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை இன்று  சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இந்நிலையில் புதிய…

பெற்றோல் பௌசர் சீல் உடைத்து திருட முயன்ற சாரதி,நடத்துநர் கைது

Posted by - September 29, 2018 0
பெற்றோல் பௌசர் சீல் உடைத்து திருட்டில் ஈடுபட முயற்சி செய்த 2 சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது. திருகோணமலை சீனக்குடா ஐ.ஓ.சி வாகனங்கள் நிறுத்தும் இடத்தில்…

ரணில் விக்ரமசிங்க தன்னிச்சையாக முடிவு எடுத்தார்: மைத்திரி குற்றச்சாட்டு

Posted by - October 29, 2018 0
முன்னாள் முதல்வர் ரணில் விக்ரமசிங்கே தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்சனை எழுந்ததாக இலங்கை அதிபர் சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது: ரணில் விக்ரமசிங்கே தன்னிச்சையாக…