மும்பை மின்சார ரயிலில் பயணித்த யுவதி ஒருவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிர் தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரயில் கதவருகே நின்றுக் கொண்டு பயணித்த யுவதியொருவர், கையை வெளியே நீட்டியவாறு பயணம் செய்துள்ளார்.
இதன்போது எதிர்பக்கத்திலிருந்து மற்றுமொரு ரயில் வேகமாக அருகே பயணித்த நிலையில், வீசிய பலத்த காற்றின் காரணமாக நிலை தடுமாறிய யுவதி ரயிலிலிருந்து தவறி விழுந்துள்ளார்.
தவறி விழுந்து மிதிப்பலகையை பிடித்து தொங்கிக் கொண்டிருந்த யுவதியை அருகிலிருந்த சக பயணிகள் போராடி காப்பாற்றியுள்ளனர்.
இந்த காட்சி சக பயணியொருவரின் தனது தொலைபேசியில் பதிவாகிய நிலையில், தற்போது அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.