சலுகைகளைக் கோரி அடம்­பி­டித்­தார் விக்­னேஸ்­வ­ரன்

124 0

வட­மா­காண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு, ஏனைய மாகாண முத­ல­மைச்­சர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளமை போன்று, தீர்­வை­யற்ற வாக­னம் வழங்­கப்­பட வேண்­டும் என்று, அமைச்­சர் பைசர் முஸ்­தபா முன்­வைத்­தி­ருந்த அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் அமைச்­ச­ர­வை­யி­னால், நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

ஏனைய மாகாண முத­ல­மைச்­சர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட தீர்­வை­யற்ற வாகன சலு­கையை விடக் குறை­வான சலுகை வழங்­கப்­பட்­ட­தால், வட­மா­காண முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரன் அதை ஏற்க மறுப்­புத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இதை­ய­டுத்து, அமைச்­சர் பைஸர் முஸ்­தபா, அனைத்து மாகாண முத­ல­மைச்­சர்­க­ளுக்­கும் வழங்­கப்­பட்ட சலுகை போன்றே, வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்­கும் வாகன சலுகை வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்ற அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்தை முன்­வைத்­தி­ருந்­தார்.

இந்­தக் கோரிக்­கையை அமைச்­ச­ரவை ஏற்­றுக்­கொண்ட போதி­லும், நிதி­ய­மைச்­சர் மங்­கள சம­ர­வீர, வாக­னக் கொள்­வ­னவு தொடர்­பான தன்­னு­டைய அறிக்­கையை மீறும் இந்­தக் கோரிக்­கையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று கருத்தை வலி­யு­றுத்­தி­னார்.

அமைச்­சர் மங்­க­ள­வின் இந்த எதிர்ப்­பை­ய­டுத்து, வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்­கான தீர்­வை­யற்ற வாக­னக் கோரிக்­கையை, அமைச்­ச­ரவை நிரா­க­ரித்­துள்­ளது.வடக்கு மாகாண சபை­யின் பத­விக் காலம் எதிர்­வ­ரும் 25ஆம் திக­தி­யு­டன் நிறை­வுக்கு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

Related Post

இந்திய அமெரிக்க பெண்ணுக்கு அதிபர் விருது!

Posted by - October 22, 2018 0
மனித கடத்தலை தடுப்பதற்காக சிறப்பாக செயல்பட்ட இந்திய அமெரிக்க பெண்ணுக்கு அதிபர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. ஹூஸ்டன் மாகாண மேயர் சில்வெஸ்டர் டர்னருக்கு, மனித கடத்தல்…

மைத்திரி – மஹிந்த கண்டியில் – ஒரே மேடையில்

Posted by - October 16, 2018 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் கண்டியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் இன்று கலந்துகொண்டனர். தாய்லாந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் விருது ஒன்றைப்…

இலங்கைக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!!

Posted by - October 10, 2018 0
உலகின் பலமான கடவுச் சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்தளதினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலுக்கு அமைய…

பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள்

Posted by - December 19, 2018 0
இலங்கையில் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் வீழ்ச்சியடையும் போதெல்லாம் அதிகமாகப் பாதிக்கப்படுவது தமிழ், முஸ்லிம் மக்களே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

வெளிநாட்டில் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட இலங்கையருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

Posted by - September 29, 2018 0
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கையர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்து அவுஸ்திரேலியாவில் அரசியல் தலைவர்களை கொலை செய்வது மற்றும்…