இலங்கை தமிழர் படுகொலை: காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தண்டிக்கப்பட வேண்டும் – தமிழக அரசு அதிரடி அறிவுப்பு

339 0

இலங்கை தமிழர் படுகொலைக்கு உடந்தையாக செயற்பட்ட காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் செயற்பாடு போர் குற்றமே என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மேற்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, லட்ச கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலைக்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி உதவியமையை, இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளார்.

எனவே அது மிகப்பெரிய போர் குற்றம் என்பதை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் மற்றும் தி.மு.க.விற்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த போர்குற்ற செயலை கண்டிக்கும் வகையில், எதிர்வரும் 25 ஆம் திகதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும், குறித்த கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில், ‘இலங்கை போரின் போது இந்திய அரசாங்கம் மற்றும் ஏனைய சில நாடுகளும் உதவி புரிந்தன என்றும், தாம் தமிழர்களை அழிக்கவில்லை தீவிரவாதத்தையே அழித்தோம்’ என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்றது மனித உரிமை மீறல் என்றும், லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்றும் குற்றச்சாட்டுக்கள் விடையின்றி நீடிக்கிறது.

இதனால் குறித்த போர்குற்றத்திற்கு காரணமாக செயற்பட்ட காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தண்டிக்கப்பட வேண்டும் என, தற்போதைய தமிழக அரசு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

ஆணவக்கொலை: தந்தையே மகளை கொலை செய்தார்

Posted by - November 21, 2018 0
ஓசூர் காதல் தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தந்தையே மகளை கொன்ற தகவல் விசாரணையில் உறுதியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தீஷும்…

கமுதி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோயில் திருவிழா!

Posted by - October 20, 2018 0
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, ஆண்கள் மட்டும் இரவு முழுவதும் அம்மனை வழிபட்ட வினோத திருவிழா நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராமத்தில்…

சிறப்புப் பூஜைக்காக திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன்

Posted by - November 5, 2018 0
சபரிமலை கோயில் நடை, சிறப்புப் பூஜைக்காக இன்று திறக்கப்படவுள்ளது. இதனால், நாளை வரை, பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன்…

சபரிமலை கோயிலை பூட்டுவேன்!

Posted by - October 19, 2018 0
“ஆச்சாரங்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்தால் சபரிமலை கோயிலை பூட்டுவேன்” என்று கோயிலின் தந்திரி கண்டரரு ராஜீவரு அதிரடியாக தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற…

சிறுமி கழுத்தறுத்து கொலை: குற்றவாளிமீது பாயம் சட்டம்

Posted by - November 3, 2018 0
ஆத்தூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த, 13 வயது சிறுமியின் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் தினேஷ்குமார் மீது குண்டர் சட்டம்…