அர­சி­யல் கைதி­கள் அனை­வ­ரை­யும் -டிசெம்­ப­ருக்­குள் விடு­விக்க வேண்­டும் – ரெலோ­!!

124 0

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளிள் 107 பேர் பல ஆண்­டு­க­ளா­கத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை முற்­றாக நீதிக்கு விரோ­த­மா­தா­னது. போர் முடிந்த பின்­னர் 12ஆயி­ரத்­துக்­கும் அதி­ க­மாக தமிழ் கைதி­க­ளுக்கு மறு­வாழ்வு அளித்து விடு­வித்­த­தைச் சுட்­டிக்­காட்டி எதிர்­வ­ரும் டிசெம்­பர் மாதத்­துக்கு முன்­னர் அர­சி­யல் கைதி­கள் அனை­வ­ரை­யும் விடுதலை செய்ய வேண்­டும் என ரெலோ அமைப்­பின் தேசிய மாநாட்­டில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

ரெலோ அமைப்­பின் தேசிய மாநாடு நேற்­று­முன்­தி­னம் மட்­டக்­க­ளப்­பில் நடை­பெற்­றது. அதில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள் வரு­மாறு
இலங்­கைத் தீவின் தேசி­யக் கேள்­வி­யா­க­வுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்­வாக, தமி­ழி­னத்­தின் அர­சி­யல் அபி­லா­சை­களைத் திருப்­திப்­ப­டுத்­தக்­கூ­டிய அர­சி­யல் தீர்­வுத்­திட்­டம் ஒன்றை எதிர்­வ­ரும் டிசெம்­பர் மாதம் 31ஆம் திக­திக்கு முன்­னர் முன்­வைக்க அரசு தவ­றும் பட்­சத்­தில் அர­சுக்­குத் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பால் அளிக்­கப்­பட்­டு­வ­ரும் ஆத­ரவை முடி­வு­றுத்த வேண்­டும்.

தமி­ழி­னத்­தின் தாய­கத்­தில் போர் முடி­வு­றுத்­தப் பட்டு 9 ஆண்­டு­கள் கடந்து விட்­ட­போ­தி­லும் நியா­ய­மான கார­ணங்­கள் எது­வு­மின்றி வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் ஒரு இலட்­சத்­துக்­கும் மேற்­பட்ட அரச படை­யி­னர் ஆக்­கி­ர­மித்து நிலை­கொண்­டி­ருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்­பதை மீண்­டும் பிர­க­ட­னப்­ப­டுத்தி, படைக்­கு­றைப்பு என்­பது திட்­ட­வட்­ட­மா­ன­தும் நீதி­யா­ன­து­மான கால­வ­ரை­ய­றைக்­குள் அர­சால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு, 1981ஆம் ஆண்­டி­லி­ருந்த நிலைக்கு படை­க­ளின் பிர­சன்­னத்தை மட்­டுப்­ப­டுத்த வேண்­டும்.வடக்கு, கிழக்­கில் அரச படை­கள் தொடர்ந்து பெரும் எண்­ணிக்­கை­யில் ஆக்­கி­ர­மிப்­புப் படை­க­ளாக நிலை­கொண்­டி­ருப்­ப­தை­யும் பாது­காப்­புப் படை­யி­ன­ருக்­கான செல­வீ­னம் என்­பது தமிழ், முஸ்­லிம் மக்­களை மாத்­தி­ர­மல்­லா­மல், சிங்­கள மக்­க­ளை­யும் பாதிக்­கும் வகை­யில் தேசியப் பொரு­ளா­தா­ரத்­தில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதை கருத்­தில் கொண்டு, எதிர்­வ­ரும் வரவு, செல­வுத் திட்­டத்­திற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு அளிக்­கக்­கூ­டாது என­வும் இம் மாநாடு கோரு­கின்­றது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு வெளியே நின்று செயற்­பட்­டு­வ­ரும் தமிழ் அர­சி­யல் கட்­சி­கள் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் ஒன்­று­பட்டு ஒரே அணி­யாக செயற்­ப­டு­வ­தன் மூலமே, ஒன்­று­பட்ட தமிழ்த் தேசிய அர­சி­யற் பலத்­தின் ஊடாக எம் இனத்­தின் குறிக்­கோ­ளான அர­சி­யல் சுதந்­தி­ரத்தை வென்­றெ­டுக்க முடி­யும் என்­பதை வலி­யு­றுத்­தி­யும், இலங்­கைத் தீவின் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சி­யல் தீர்வை, இலங்­கை­யின் அர­சி­யல் – நிர்­வாக ஒற்­றுமை என்ற கட்­ட­மைப்­புக்­குள் உரு­வாக்க உறு­தி­யா­ன­தும் இறு­தி­யா­ன­து­மான முயற்­சி­களை முன்­னெ­டுக்க வேண்­டிய கட்­டாய தேவை­களை கருத்­திற் கொண்டு, அத்­த­கைய அர­சி­யல் போராட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒரே அணி­யாகத் திரள முன்­வ­ரு­மா­றும் தமிழ்த் தேசி­யத்தை முன்­னி­றுத்தி நிற்­கும் சகல அர­சி­யல் கட்­சி­கள் மற்­றும் சமூக அமைப்­புக்­க­ளை­யும் இந்த மாநாடு அறை­கூவி அழைக்­கின்­றது.

நியா­ய­மா­ன­தும் யதார்த்­த­பூர்­வ­மா­ன­து­மான கால­வ­ரை­ய­றைக்­குள் இலங்­கை­யின் அர­சி­யல்த் தீர்­வாக ஒரு­மைப்­பாட்­டுக்­குள் அர­சி­யல் தீர்வை வென்­றெ­டுக்க சாத்­தி­ய­மில்­லா­த­வி­டத்து, எமது பிரச்­சி­னையை உலக அரங்­கின் முன் சமர்ப்­பித்துத் தமிழ் இனம் ஓர் தனித் தேசிய இனம் என்ற அடிப்­ப­டை­யில் எம்­மி­னத்­தின் பிறப்­பு­ரி­மை­யான சுய­நிர்­ணய உரி­மை­யைப் பிர­யோ­கித்து, உலக நாடு­க­ளின் மன்­ற­மான ஐக்­கிய நாடு­கள் சபை ஊடா­க­ ஓர் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை, வட­கி­ழக்கு மாகா­ணங்­க­ளில் வாழும், தமிழ்ப் பேசும் மக்­கள் மத்­தி­யி­லும், வெளி­நா­டு­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்து அங்கு வாழும் இலங்­கைத் தமி­ழர்­கள் மத்­தி­யி­லும் நடத்த வேண்­டும் என்ற அர­சி­யல் தீர்­மா­னத்தை செய­லாக்க அனைத்து தமிழ்த் தேசிய சக்­தி­க­ளும் முன்­வ­ர­வேண்­டும் என்­றும் இந்த மாநாடு தீர்­மா­னிக்­கின்­றது.

போர்க்­குற்ற விசா­ரணை விட­யத்­தில், தமிழ் இனத்­தின் தரப்­பில் எந்­த­வி­த­மான விட்­டுக்­கொ­டுப்­புக்கோ சம­ர­சத்­துக்கோ இட­மில்லை என்­பதை திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்து, இந்த தேசிய மாநாடு, ஐக்­கிய நாடு­கள் சபை­யின் மனித உரி­மை­கள் மன்­றத்­தில் இலங்கை ஏற்­றுக்­கொண்ட கடப்­பா­டு­க­ளை­யும் பொறுப்­புக்­க­ளை­யும் காலம் கடத்­தா­மல் நிறை­வேற்­றியே ஆக வேண்­டும் என்­பதை ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் மன்­றம் வலி­யு­றுத்தி உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்­றும், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்­திற்­குள் இலங்கை அரசு தனது கட்­டுப்­பா­டு­களை ஏற்­றுக்­கொண்டு தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த தவ­று­மி­டத்து, ஐக்­கிய நாடு­கள் சபை போர்க்­குற்­றங்­கள் தொடர்­பில் சர்­வ­தேச விசா­ர­ணையை நடாத்த வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­திக் கோரு­கின்­றது என்­பன போன்ற தீர்­மா­னங்­கள் மாநாட்­டில் நிறை­வேற்­றப்­பட்டன.

Related Post

வர்த்தமானி அறிவித்தல் என்ற செய்தி பொய்யானது

Posted by - October 29, 2018 0
இன்றைய தினத்தை அரசாங்க விடுமுறையாக அறிவிக்கும் வகையில், நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று…

சிறப்புரிமைக்கு களங்கம் – குற்றம் சுமத்தும் ஹிருணிகா

Posted by - October 10, 2018 0
தெமட்டகொடையில் இளைஞர் கடத்தல் தொடர்பில் நானோ எனது சட்டத்தரணியோ குற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியால் எனது சிறப்புரிமைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்தார்.…

மக்களுக்கு சிறந்த சேவை செய்ய அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்

Posted by - November 1, 2018 0
கடந்த அரசாங்கத்தினால் மக்களுக்கு உரிய முறையில் சேவை செய்யப்படாத காரணமாக மீண்டும் ஒருமுறை இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்து இருப்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இச்…

சபாநாயகர் வருகைதராதமை தொடர்பில் விளக்கமளிக்கும் தினேஷ்!

Posted by - November 19, 2018 0
நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை விட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அதிகமாக இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

மீண்டுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட மாட்டாது

Posted by - November 20, 2018 0
  தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராகவோ, பிரதமருக்கு எதிராகவோ மீண்டுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட மாட்டாதென ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…