வடக்­குக்கு ஒதுக்­கிய நிதியை – இன்­ன­மும் விடு­விக்­காத கொழும்பு!

194 0

வடக்கு மாகா­ணத்­தின் நடப்பு ஆண்டு செயற்­பா­டு­க­ளுக்­குப் பாதீட்­டில் ஒதுக்­கப்­பட்ட நிதி இன்­ன­மும் முழு­மை­யா­கக் கிடைக்­க­ வில்லை என்று மாகா­ணத் திறை­சேரி தெரி­வித்­தது.

வடக்கு மாகா­ணத்­தில் திணைக்­க­ளங்­கள், அமைச் சுக்­கள், அலு­வ­ல­கங்­கள் ஊடாக மேற்கொள்ள வேண்­டிய வேலைத் திட்­டங்­க­ளுக்­காக 3 ஆயி­ரத்து 630 மில்­லி­யன் ரூபா நிதி பாதீட்­டில் ஒதுக்­கப்­பட்­டது.

பிர­மாண அடிப்­ப­டை­யி­லான மூல­தன நன்­கொடை நிதி­யாக 551 மில்­லி­யன் ரூபா­வும், மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட நிதி­யாக 3 ஆயி­ரத்து 81 மில்­லி­யன் ரூபா நிதி­யும் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த ஆண்டு முடி­வ­தற்கு சுமார் இரு மாதங்­களே உள்ள நிலை­யில் அந்த நிதி முழு­மை­யாக மாகா­ணத்­துக்கு விடு­விக்­கப்­ப­ட­ வில்லை.

பிர­மாண அடிப்­ப­டை­யி­லான மூல­தன நன்­கொடை நிதி­யில் 250 மில்­லி­யன் ரூபா­வும், மாகா­ணக் குறித் தொ­துக்க்­ப­பட்ட நிதி­யில் ஆயி­ரத்து 200 மில்­லி­யன் ரூபா­வுமே விடு­விக்­கப்­பட் டுள்ளது.

மீத­முள்ள 2 ஆயி­ரத்து 180 மில்­லி­யன் ரூபா நிதி இன்­ன­மும் கிடைக்­க­வில்லை என்று மாகா­ணத் திறை­சேரி தெரி­வித்­தது.

Related Post

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாபுஷ்கர விழா தொடக்கம்

Posted by - October 11, 2018 0
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாபுஷ்கர விழா தொடக்கம் மகா புஷ்கர விழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநல்வேலி மாவட்டங்களில் பாயந்தோடும் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் பக்தர்கள் புனித…

வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - October 17, 2018 0
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் சிலவற்றை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய மன்னாரில் 23 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 53 ஏக்கர் காணியும்,…

கொச்சிக்காய்த் தூள் பிரயோகம் : விசாரணை ஆரம்பம்

Posted by - November 22, 2018 0
பாராளுமன்ற சபைக்குள் வைத்து  மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மீது இரு எம்.பி.க்கள் கொச்சிக்காய்த் தூள் தண்ணீர் பிரயோகம் செய்தமை, புத்தகத்தினால் எறிந்து காயப்படுத்தியமை…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழை

Posted by - October 20, 2018 0
நாட்டில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்து வரும் இரு நாட்களுக்கு காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்றும் (20) நாளையும் (21) நாட்டின் பெரும்பாலான…

மாவீரர்தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களுக்கு எச்சரிக்கை!

Posted by - October 31, 2018 0
யாழ்.வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரை பொலிஸார் அழைத்து மிரட்டி எச்சரித்துள்ளனர். வல்வெட்டித்துறை தீருவிலில் கடந்த வருடம் மாவீரர் நாள்…