அரசாங்கம் செய்தது தவறு – ஊவா முதலமைச்சர்

237 0

பாராளுமன்ற உறுப்பினர்கள் வாகன இறக்குமதிக்கான தீர்வை வரியற்ற அனுமதிப் பத்திரங்களை பெற்று அவற்றை விற்பனையும் செய்து முடிந்துள்ள நிலையில் வாகன இறக்குமதிக்கான தீர்வை வரியற்ற அனுமதிப் பத்திரங்களைத் தடை செய்யும் சட்டங்களைக் கொண்டுவருவது பொருத்தமற்ற நடவடிக்கையாகும் என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் தீர்வை வரியற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரங்களை எதிர்வரும் 6 மாத காலத்துக்கு நிதி அமைச்சினால் இடைநிறுத்தி வைக்க தீர்மானம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த தடையைக் கொண்டுவரும் போது பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டிருப்பதில் எந்தவித பயனும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் அனுபவிக்கும் அத்தனை இன்பங்களையும் அனுபவித்து விட்டு அதனால், நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு வரும்போது, அப்பாதிப்புக்களுக்காக மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்கே அரசாங்கம் இவ்வாறான தடைச் சட்டங்களை கண்துடைப்பாக அறிமுகம் செய்கின்றது என்பது சாதாரண பாமர மக்களினதும் அறிவுக்கு எட்டிய விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

இராணுவத்திற்கு எதிராக ஐ.நா. எடுத்த தீர்மானம் பாராட்டுக்குரியது

Posted by - October 22, 2018 0
இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதி கலன அமுனுபுரவை மாலியிலிருந்து திருப்பியனுப்புவதற்கு ஐ.நா. எடுத்துள்ள தீர்மானம், யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்றோ ஒரு நாள் தங்களுக்கு நீதி கிடைக்குமென சிந்திப்பதற்குக்…

உத்தேச குற்றப்பிரேர​ணையைத் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது

Posted by - November 10, 2018 0
ஜனாதிபதிக்கு எதிரான உத்தேச குற்றப்பிரேர​ணையைத் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது என முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொறுப்புள்ள ஓர் அரசியல் இயக்கம்…

இலங்கையில் தொடரும் பொம்மலாட்டம்

Posted by - October 29, 2018 0
இலங்கையில், அதிபர் மைத்ரிபால சிறிசேனவால், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் பதவியில் இருப்பதை அங்கீகரிப்பதாக, பார்லிமென்ட் சபாநாயகர், கரு ஜெயசூர்யா கூறியுள்ளார். மேலும்,…

முன்னாள் புலிகளை மஹிந்த – மைத்திரி அரசு விடுவிக்கும் – நாமல் உறுதி

Posted by - November 3, 2018 0
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து மஹிந்த – மைத்திரி தலைமைமயிலான புதிய அரசாங்கம் விடுதலை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ…

மைத்திரியை கொண்டுவந்த சந்திரிகா பதுங்கி இருந்தாரா ?

Posted by - November 9, 2018 0
மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்ததன் பின்னர் முதல்தடவையாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பொது நிகழ்வொன்றில் இன்று நேற்று கலந்துகொண்டுள்ளார். கொழும்பில்  நடைபெற்ற…