கிளிநொச்சியில் பொய்கூறி ஏமாற்றி அழைத்துவரப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ள வைக்கப்பட்ட மக்கள்

100 0

கடந்த காலங்களில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் நியமனம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது உலகறிந்த உண்மை.

இதன்காரணமாக உண்மையாகவே தகுதியுடன் இணைக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டது.

அரசியல் வாதிகளின் செல்வாக்குடன் சில கட்சி சார்ந்து இணைக்கப்பட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் பலர் இன்றும் மக்கள்விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு தமது நியமன விசுவாசத்தினை வெளிப்படுத்தும் பல சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்படவில்லை, கொல்லப்பட்டவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளே என்று சர்வதேசத்துக்கு உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டு கிளிநொச்சி மக்களின் ஒரு தொகுதியினரை இன்றும் தவறான பாதையில் வழிநடத்திச் செல்லும் சந்திரகுமாரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்ததும் இந்த சமூர்த்தி உத்தியோகத்தர்களே.

சமூர்த்தி கொடுப்பனவுக்கு பதிவுகளை மேற்கொள்ள வருமாறே அந்த மக்களுக்கு பொய்யாக அறிவுறுத்தப்பட்டு ஏமாற்றி அழைத்துவரப்பட்டே ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ள வைக்கப்பட்டனர்.

இதுபோல பல சம்பவங்கள் சமூர்த்தி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகைமை இல்லாமல் இணைக்கப்பட்ட சமூர்த்தி அலுவலர்களுக்காக பொதுக் கல்விப் பரீட்சைகளில் குதிரையோடப்போய் பிடிபட்ட சம்பவங்களும் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளன.

ஆகவே கிளிநொச்சியில் உள்ள பெரும்பாலான சமூர்த்தி அலுவலர்களது அரசியல் பின்னணி சகலரும் அறிந்ததே. இந்த ஆர்ப்பாட்டத்தினையும் யார் தூண்டி விட்டிருப்பார்கள் என்பதும் சகலரும் அறிந்ததே.

ஆகவே அலுவலர்கள் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்து தங்களை மீண்டும் ஒருமுறை சுயபரிசோதனை செய்து தற்போது நடைமுறையில் உள்ள அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மக்களுக்கான நன்மை பயக்கும் வேலைத்திட்டங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சியற்று மக்களுக்கான சேவையில் ஈடுபடுவார்களேயானால் இவ்வாறான அவப்பெயர்களில் இருந்து விடுபடமுடியும்.

Related Post

உகண்டா நிலச்சரிவில் 31 பேர் பலி

Posted by - October 13, 2018 0
கிழக்கு உகண்டாவில் எல்கோன் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் உருவான வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் மழையை அடுத்தே கடந்த வியாழக்கிழமை மாலை இந்த…

ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கான ஆர்ப்பாட்ட பேரணி

Posted by - November 15, 2018 0
ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இன்று (15) பகல் 2 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு…

சிறிசேன – மஹிந்த தலைமையிலான கூட்டம் ஆரம்பம்

Posted by - December 14, 2018 0
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. பரபரப்பான அரசியல்…

பரஸ்பர துப்பாக்கிச் சூடு : முக்கிய புள்ளிகள் இருவர் பலி

Posted by - November 27, 2018 0
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பாரியளவிளலான திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஹபரகட வசந்த மற்றும் மீகொட உபுல் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

தாயின் கொலை பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Posted by - October 15, 2018 0
யாழ்ப்பாணம் ஊரெழுவில் நேற்று இரவு இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில், தாயொருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஊரெழு மேற்கில் மகனைத்…