நாமல் ராஜபக்சவுக்கு பெண்தேடும் படலம் ஆரம்பம்

186 0

நாட்டின் முதல் பெண்மணியாக வரக்கூடிய தகுதியான பெண்ணை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச, தனது மூத்த மகன், நாமல் ராஜபக்சவுக்காக தேடி வருவதாக தெரியவருகிறது.

மகிந்த ராஜபக்சவின் உறவு முறை பெண்ணொருவர் அண்மையில் அவரை சந்திக்க சென்றிருந்ததுடன் ஷிரந்தி ராஜபக்சவுடன் கலந்துரையாடியுள்ளார்.

அப்போது, ராஜபக்ச குடும்பத்தின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்சவின் திருமணம் பற்றி பேசப்பட்டுள்ளதுடன் நாமல் ராஜபக்ச குறித்தும் பேசப்பட்டுள்ளது.

“ மாமி, ரோஹித்த ராஜபக்சவின் திருமணம் நிச்சயமாகி விட்டது, நாமல் அண்ணன் சம்பந்தமாக எதுவும் இல்லையா?” என உறவு முறை பெண், ஷிரந்தி ராஜபக்சவிடம் வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஷிரந்தி ராஜபக்ச, “ நாட்டின் முதல் பெண்மணியாக வரக் கூடிய தகுதி உள்ள, அரசியல் ரீதியான பெண்ணை தேடுகிறோம். இன்னும் கிடைக்கவில்லை. அதுதான் பிரச்சினை” என கூறியுள்ளார்.

இதனடிப்படையில், எதிர்கால ஜனாதிபதியின் பாரியாராகும் தகுதி உள்ள பெண்ணுக்கு வாய்ப்பு இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

Related Post

சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்த பயணத்துக்கு அடுத்த வாரம் பேச்சு

Posted by - December 11, 2018 0
சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்பட வேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான…

ஜனாதிபதியின் புத்தகத்துக்கு ”மண்வெட்டி” என பெயர் வைக்கட்டும்- ஐ.தே.க.

Posted by - November 25, 2018 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்கவைப் பற்றி எழுதவுள்ள புத்தகத்துக்கு மண்வெட்டி அல்லது கால் மாட்டு எனப் பெயர் சூட்டிக் கொள்ளட்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்…

ரணிலை ஆதரிக்க மாட்டோம் – ரிசாட்

Posted by - December 7, 2018 0
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பது எமது நோக்கமல்ல என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். மாறாக…

உச்ச நீதிமன்றத்தீர்ப்பைத் தொடர்ந்து ரணிலுக்கு வந்த அவசர அழைப்பு

Posted by - December 13, 2018 0
உச்ச நீதிமன்றத்தினால் சற்று முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு, பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான…

நீதிக்காக ஜம்பர் அணியத் தயார் – சபாநாயகர்

Posted by - November 28, 2018 0
நீதிக்காக சிறைச்சாலையில் ஜம்பர் ஆடை அணிய வேண்டி வந்தால், அதற்கும் தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதிலும் போலியான ஆவண…