கர்ப்பிணி பெண்ணொருவரின் வயிற்றில் மண்வெட்டிப் பிடியினால் தாக்கிய கொடூர சம்பவம்

178 0

யாழ்ப்பாணத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணொருவரின் வயிற்றில் மண்வெட்டிப் பிடியினால் தாக்கிய கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபரான காதலன் தப்பியோடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.சாவகச்சேரி, கெற்போலி பகுதியில் நேற்று மாலை தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான பெண் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் காணப்பட்ட காதல் உறவே இதற்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

நேற்று மாலை குறித்த பெண் வீதியால் சென்று கொண்டிருந்த போது , வீதியில் வழிமறித்த காதலன் மண்வெட்டி பிடியினால் அவரது வயிற்றில் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பெண் வீதியில் சுருண்டு விழுந்து கதறியதை அடுத்து வீதியால் சென்றவர்கள் குறித்த பெண்ணை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கான பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Post

விசாரைணக்குழுவின் இரண்டாவது அறிக்கை ஒப்படைப்பு

Posted by - January 25, 2019 0
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரைணக்குழுவின் இரண்டாவது அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை இன்று (வெள்ளிக்கிழமை)  நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர்…

வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று அல்லது நாளை

Posted by - December 13, 2018 0
பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்றோ (13) அல்லது நாளையோ (14) வழங்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்படுகின்றது. இந்த…

நாடக கலைக்கு புத்துயிர் அளிக்கும் லண்டன் பயிற்சி பட்டறை

Posted by - October 17, 2018 0
மேடை நாடகத்தை இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் லண்டனில் நாடக பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. லண்டனின் ராயல் ஓபரா ஹவுஸ் மேடை நாடகத்திற்கு…

இலங்கையின் பணவீக்கம் குறைவு

Posted by - October 27, 2018 0
இலங்கையின் பணவீக்கம் கடந்த மாதம் குறைவடைந்துள்ளதாக மத்தியவங்கி அறிவித்துள்ளது. பணவீக்கமானது 0.9 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 125.4 வீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்க நிலைமை, கடந்த…

நடைபெற்ற குற்றத்திற்கும் அவருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை

Posted by - December 21, 2018 0
கடந்த 30 ஆம் திகதி வவுணதீவு பொலீஸ் பிரவிற்குட்பட்ட வலையறவு பாலத்திற்கு அருகாமையில் உள்ள சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபராக உள்ள அஜந்தன் அவரது விடுதலையை…