இலங்கையில் அமெரிக்க இராணுவ தளம் தேசிய சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல்

187 0

இலங்கையில் அமெரிக்க இராணுவ தளம் அமைக்கப்படின் அது நாட்டின் இறையாண்மைக்கும், தேசிய சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ”இராணுவ தளமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பாக அமெரிக்க தூதரகமும், இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுவும் அமெரிக்க இராணுவ முகாமை கிழக்கில் திருகோணமலையில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் உண்மை தன்மை இருப்பின், அது நாட்டின் இறையாண்மைக்கும், தேசிய சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும். எனவே இது தொடர்பான முழுமையான தெளிவுபடுத்தல் அவசியம்” எனக் குறிப்பிட்டார்.

Related Post

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

Posted by - October 10, 2018 0
தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் வழங்கப்படுகிறது. இதில் குறைந்த பட்சம் ரூ.17 ஆயிரம் போனஸ் கிடைக்கும். அரசு மற்றும் தொழிலாளர் சங்கம்…

அமெரிக்காவின் டெக்சாஸில் கனமழை

Posted by - October 17, 2018 0
அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மைக்கேல் புயல் புரட்டிப்போட்ட நிலையில் தற்போது டெக்சாஸ் மாகாணத்தில்…

தமிழரசுக்கட்சி எம்.பிக்கு அமைச்சு பதவி!

Posted by - November 1, 2018 0
தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மஹிந்த அணியுடன் தீவிர பேச்சில் ஈடுபட்டு வருகிறார் என்பதை நாம்நம்பகரமாக அறிந்துள்ளோம். குறிப்பிட்ட வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி, கடந்த சில…

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை கூடும்

Posted by - October 31, 2018 0
பாராளுமன்றத்தை வெள்ளிக்கிழமை கூட்டும் தனது தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவிப்பதாக கட்சி தலைவர்களிடம் சபாநாயகர் உறுதியளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில்  கட்சித்…

சர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!

Posted by - October 30, 2018 0
“அரசமைப்புக்கு முரணான சர்வாதிகார ஆட்சியை எந்தச் சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நாடாளுமன்றத்திலேயே தீர்வு உள்ளது. அதனால் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகரிடம்…