பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகளுக்கு முடிவு

130 0

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகளை முடிவுறுத்தும் நோக்குடன் 2018 செப்டெம்பரில் உடல் ரீதியான தண்டனைகளை நிறைவு செய்தல் 2020 என்ற பிரச்சாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

‘உண்மையான மாற்றத்திற்கான படிநிலை வளர்ச்சி’ என்ற தொனிப்பொருளில் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இலங்கை மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் பங்கேற்ற Stop Child Cruelty இன் தலைவியான டாக்டர் விக்ரம நாயக்க தெரிவித்துள்ளதாவது, “பாடசாலை மாணவர்கள் மத்தியில் வழங்கப்படுகின்ற தண்டனைகளால் அவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படுகின்ற தாக்கம் மற்றும் வளர்ந்தவர்களாக மாறிய பின்னர் முகங்கொடுக்கக் கூடிய பாரதூரமாக உளவியல் தாக்கங்கள் ஆகிய பாதிப்புக்களை இப்பிரச்சாரம் சுட்டிக்காட்டுகின்றது.

மேலும் எமது செய்தியானது பாரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, LEADS சர்வோதய இயக்கம், இந்து மகளிர் மன்றம், சிறுவர்களைப் பாதுகாத்தல் தொடர்பான ஜனாதிபதியின் பணி இலக்கு குழு, மற்றும் குடும்ப திட்டமிடல் சங்கம் போன்ற பல்வேறு தரப்பினரது ஆதரவும் இதற்கு கிடைக்கப்பெற்றுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Related Post

மத்திய மாகாண பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் பதவிப்பிரமாணம்

Posted by - September 26, 2018 0
மத்திய மாகாண பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் , ஆளுநர் பி.பீ. திசாநாயக்க முன்னிலையில் இன்று அவர்…

காட்டு யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

Posted by - October 12, 2018 0
வெலிக்கந்தை ருகுணுகெத கிராமத்தில் ஓடைக்குள் விழுந்து உயிரிழந்த காட்டு யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சோமாவதிய வனப் பிரதேசத்தில் சுற்றித்திரிந்த யானையே உயிரிழந்திருப்பதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

விரைவில் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்போம் – அஜித் பி பெரேரா

Posted by - November 17, 2018 0
வெகுவிரைவில் அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தை மீண்டும்…

சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் மனோவின் கீச்சக பதிவு

Posted by - November 11, 2018 0
சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்க, கல்லறைக்கு உள்ளே கண்ணீர் வடிப்பார் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன்…

முன்னாள் பிரதமர் மகனுக்கு ஆயுள் தண்டனை

Posted by - October 11, 2018 0
கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு வங்கதேச பிரதமராக கலீதா ஜியா பதவி…