விசாரைணக்குழுவின் இரண்டாவது அறிக்கை ஒப்படைப்பு

29 0

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரைணக்குழுவின் இரண்டாவது அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை இன்று (வெள்ளிக்கிழமை)  நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரளவிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குறித்த குழுவினர், அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை வளாகத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர்.

சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான சி.சி.ரி.வி கானொளி தொடர்பாகவும் குறித்த குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையிலான குழுவின் அறிக்கையினை கடந்த திங்கட்கிழமை அமைச்சரிடம் ஒப்படைத்திருந்தனர்.

அதன்படி குறித்த இரு அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்து, நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் மீத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆராய நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரள மூவரடங்கிய குழுவினை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பராக்கிரம சமுத்திரத்தின் வான்கதவுகள் திறப்பு

Posted by - November 7, 2018 0
பொலன்னறுவை பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, பொலன்னறுவை – மனம்பிட்டிய பகுதியை ஊடறுத்து செல்லும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அத்தோடு,…

2019ம் ஆண்டின் டிரம்ப் – கிம் மீண்டும் சந்திப்பு

Posted by - December 21, 2018 0
2019-ம் ஆண்டு துவக்கத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜோங்.உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவு அமைச்சர் கூறினார். வடகொரியாவும் அமெரிக்காவும் பகைமையை…

ஜனாதிபதி மைத்திரியின் இரகசிய தகவல்கள் அம்பலம்! அதிர்ச்சியில் பாதுகாப்பு பிரிவு

Posted by - October 10, 2018 0
ஜனாதிபதியின் பாதுகாப்பு தகவல்கள் இணையதளம் ஒன்றில் வெளியானதால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபையின் 73வது…

இன்று கும்ப ராசி அன்பர்களுக்கு மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையுமாம்

Posted by - October 19, 2018 0
மேஷம்: மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு வந்து சேரும். பெண்கள் இஷ்ட…

52 மணித்தியாலத்தில் இலங்கை மக்களை தன்பக்கம் ஈர்க்க வைத்த தமிழ் இளைஞன்..!

Posted by - October 17, 2018 0
52 மணித்தியாலத்தில் இலங்கை மக்களை தன்பக்கம் ஈர்க்க வைத்த தமிழ் இளைஞன் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இளைஞன் 3D ஓவியங்களை தத்துரூவமாக வரைந்த பலரையும்…