இனவாதம் பேசும் தனி நபருக்கான எதிர்ப்பு நடவடிக்கை

25 0

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பாக கடந்த நாட்களில் மாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புக்களும் கையெழுத்து வேட்டைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அந்தவகையில் இனவாதம் பேசுகின்ற ஆளுநரை உடனடியாக பதவியிலிருந்து மாற்றப்பட வேண்டும் இது முஸ்லிம் இனத்திற்கான எதிர்ப்பு அல்ல இனவாதம் பேசும் தனி நபருக்கான எதிர்ப்பு நடவடிக்கை என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மற்றும் சமுக வலையத்தள ஆர்வலர்கள் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர் அதன்படி இன்றைய தினம் 25 மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள சகல பிரதேசங்களிலும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

அதன் பிரகாரம் வர்த்தக சங்கம் தனியார் போக்குவரத்து சங்கம் தனியார் நிறுவனங்கள் அரச திணைக்களங்களின் ஆதரவுடன் மிகவும் சுமுகமான நிலையில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது அத்துடன் ஒரு சில பகுதிகளில் வீதியில் டயர்கள் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் அரச போக்குவரத்து சேவைகள் தூரப்பிரதேச சேவைகள் மட்டும் நடைபெறுவதை அவதானிக்கமுடிந்தது. வீதியில் எதுவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

சர்வதேச தேரவாத பௌத்த மாநாடு கொழும்பில் ஆரம்பம்

Posted by - November 28, 2018 0
சர்வதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கத்தின் ஐந்தாவது சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (27)  கொழும்பில் ஆரம்பமானது. தேரவாத பௌத்த நாடுகளுக்கிடையில்…

மைத்திரியை அரசியல் அனாதை ஆக்கிய மகிந்த : நடுத்தெருவில் நிற்கும் மைத்திரி

Posted by - November 13, 2018 0
மஹிந்த ராஜபக்ஷ தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட சன்மானத்துக்கு பிரதியுபகாரமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் அனாதையாக மாற்றியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர்…

பிரதமர் நாளை நோர்வே விஜயம்

Posted by - October 2, 2018 0
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (03) நோர்வே செல்லவுள்ளார். பிரதமரின் இவ்விஜயத்தில், அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்ஷா, பாராளுமன்ற உறுப்பினர்…

தடுப்பு காவலில் ‘இன்டர்போல்’ தலைவர்

Posted by - October 7, 2018 0
மாயமானதாக கூறப்பட்ட, ‘இன்டர்போல்’ எனப்படும், சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவர், மெங் ஹாங்வே, சீனாவில், தடுப்புக்காவலில் உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்சை தலைமையிடமாக வைத்து,…

புலமைப் பரிசில் பரீட்சையை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்

Posted by - October 20, 2018 0
மாற்றீடு ஒன்று இல்லாமையே, புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்ய முடியாமல் போயுள்ளமைக்கான காரணம் என பாடசாலைகள் சுகாதாரம் தொடர்பான தேசிய நிகழ்ச்சித் திட்டப் பொறுப்பாளரும் சமூக…