இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வந்த சோதனை

110 0

சமகால அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வலுப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி சென்றவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஒழுங்காற்று நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் மத்திய செயற்குழுவின் இணக்கப்பாட்டிற்கு எதிராக செயற்படுவது தொடர்பில் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள முடியும், எனவும் அவ்வாறு கட்சி மாறுவது கட்சி கொள்கையை மீறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய ஒழுக்காற்று குழுவினால் குறித்த செயற்பாடு மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒழுக்காற்று குழுவினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகமைய அவசியமென்றால் குறித்த உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்க முடியும், கட்சி உறுப்புரிமையை தடை செய்ய முடியும் எனவும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post

அதிபரை நியமிக்கக் கோரிஆர்ப்பாட்டம்!!

Posted by - September 28, 2018 0
வவுனியா மூன்றுமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி வவுனியா தெற்கு வலயகல்வி அலுவலகத்திற்கு முன்பாக பெற்றோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒருவருடமாக…

பெரும்பான்மையை நெருங்குகிறார் மகிந்த…? அரசியல் நெருக்கடி முடிவுக்கு வருமா…?

Posted by - November 4, 2018 0
இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலை அடுத்து வரும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து யார் பிரதமர் என்பதை உறுதி…

பிரச்சினை தீர்க்காது போனால் விளைவு மோசமாகும்- சபாநாயகர்

Posted by - October 31, 2018 0
தியவன்னாவில் தீர்க்கப்பட வேண்டிய விடயத்தை பாதையில் வைத்து தீர்க்க முற்பட்டால் விளைவு மோசமாகும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய அரசியல் பிரச்சினையை தீர்க்க பாராளுமன்றத்தை…

களுத்துறையில் கரைக்குள் புகுந்த கடல்

Posted by - September 29, 2018 0
களுத்துறை பகுதியில் அலைகள் பொங்கி எழுந்து கரையில் இருந்து 100 மீற்றருக்கும் அதிகமான இடம் கடல்நீர்  தரைக்குள் புகுந்துள்ளது .நேற்றைய தினம் இந்தோனேசியாவில் இடம்பெற்ற நில நடுக்கமும்…

புதிய நிர்வாக கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு

Posted by - October 15, 2018 0
மஹர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாக கட்டடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன் தினம் திறந்து வைத்து மக்களிடம் கையளித்த போது பிடிக்கப்பட்ட படம். அருகில்…