மீளப்பெறப்படப்படவுள்ள விஜயகலாவின் அமைச்சு

176 0

விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது நியாயமா? இதனை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு – கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை மீண்டும் ஓங்கவேண்டும் என யாழில் பகிரங்க இடத்தில் இவ்வருட நடுப்பகுதியில் விஜயகலா மகேஸ்வரன் பேசியிருந்தார். இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நாம் குரல் கொடுத்தோம்.

அதையடுத்து, தான் வகித்த சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சுப் பதவியை விஜயகலா இராஜிநாமா செய்திருந்தார்.

புலிகளை ஆதரித்தமைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையிலும் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ரணில் அரசின் தீர்மானத்துக்கமைய மீண்டும் அவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார். இதனை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது. அவருக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சுப் பதவி ஜனாதிபதியால் மீளப்பெறப்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் அவர் இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜிநாமாச் செய்யும் நிலைமையை நாம் ஏற்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

Related Post

கொங்கோவில் மீண்டும் எபோலா தாக்கம்: 200 பேர் பலி

Posted by - November 11, 2018 0
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் எபோலா தாக்கத்தினால், அண்மையில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் அரைவாசிப் பங்கினர், பெனி நகரைச் சேர்ந்தவர்கள்…

தேர்தல் முடிவுக்கு எதிராக வழக்கு- மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்

Posted by - October 16, 2018 0
மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் இப்ராகிம் முகமது சாலிக்…

விவசாயத்துறையில் 5 வருட விசா; 500 தாதியரை அனுப்ப ஏற்பாடு

Posted by - October 15, 2018 0
விவசாயத் துறையில் இலங்கையர்களுக்கு ஐந்து வருட விசா வழங்க இஸ்ரேல் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் சென்றுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார இது…

கூட்டணி அரசாங்கம் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்

Posted by - October 8, 2018 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சிக்கு அறிவிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை…

சம்பந்தனுடன் இணைத்து பயணிக்க தயார் – ராஜித சேனாரத்ன

Posted by - October 14, 2018 0
இன ஐக்கிய மேம்பாட்டிற்காக சம்பந்தனுடன் இணைத்து பயணிக்க தயார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பண்டாரவளை பூனாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 157 வீடுகளை பொதுமக்களிடம்…