முறையான சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்கு தண்டனை- அமைச்சர் மத்தும பண்டார

307 0

முறையான முறையில் சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக சட்டங்களை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தற்பொழுது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொழிற்சங்கங்கள் எந்தவிதமான நடவடிக்கை எடுத்தாலும், பொது மக்களின் நலன்களுக்காக இந்த நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாகவும் மக்களுக்கு ஒழுங்காக சேவையாற்றவே அரச ஊழியர்கள் காணப்படுகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்தில் அவரது கணவர் மீது சந்தேகம்

Posted by - October 12, 2018 0
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றிய நிலையில் அண்மையில் திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட போதநாயகியின் வீட்டுக்கு வட மாகாண மகளிர் விவகார அமைச்சர்…

அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது அதிகரிப்பு

Posted by - October 13, 2018 0
அறுவைச் சிகிச்சைமூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வீதம் உலகளவில் சுமார் இரண்டு மடங்காக அதிகாரித்திருப்பதாக புதிய ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது. 2000ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்…

இலங்கையின் முன்னாள் எம்.பிக்கு மரணதண்டனை

Posted by - October 12, 2018 0
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட மூன்று பேரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை அடுத்து, அவரது உறவினர்கள் துமிந்த சில்வாவை கட்டி அணைத்து…

அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை காட்டும் தேவை இல்லை- ஜனாதிபதி

Posted by - November 15, 2018 0
பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை உண்டா இல்லையா என்பதை காட்டும் தேவை நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நம்பிக்கைக்குரிய ஒருவரை பிரதமராக…

நகரில் காணப்படும் விளம்பரப் பலகைகளை அகற்ற உத்தரவு

Posted by - October 11, 2018 0
நகரை அழகுபடுத்தும் புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் காணப்படும் விளம்பரப் பலகைகளை எதிர்வரும் 30 நாட்களுக்குள்…