ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம்- ஸ்ரீ ல.சு.க.யின் உப தலைவர்

391 0

ஜனாதிபதியுடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல12 எம்.பி.க்கள் அடுத்த இரு வாரங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து தங்களுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பியசேன கமககே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைக்க வேண்டிய எதிர்க் கட்சித் தலைமையை பொதுஜன பெரமுனவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்சியை மீண்டும் ஒரு முறை அழிவை நோக்கி இட்டுச் சென்றுள்ளார்  எனவும் பியசேன கமகே குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் ஸ்ரீ ல.சு.க.யின் எம்.பி.க்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதில்லையெனவும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறும் ஜனாதிபதியின் மிரட்டலுக்கு தாம் அஞ்ச மாட்டோம்.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாயின் முதலில் எடுக்கப்பட வேண்டியது மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிராகவே யாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Post

ஐ .தே.க வின் ஆர்ப்பாட்டம் புஸ்வாணமா

Posted by - October 31, 2018 0
புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம் புஸ்வாணமாகியது. “நீதிக்கான மக்கள்…

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர்

Posted by - October 24, 2018 0
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் சீ.ஜே.பீ. சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

மசகு எண்ணெய் விலை உலக சந்தையில் அதிகரிப்பு

Posted by - September 26, 2018 0
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக உலக பொருளாதார தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, ஒரு பீப்பா மசகு எண்ணெய் 81.20 டொலர்களாக அதிகரித்துள்ளது. டபிள்யு.…

அரசாங்கத்தை நாளைக்கு ஒப்படைத்தாலும் பொருளாதாரத்தை சீர்செய்வோம்- மஹிந்த

Posted by - September 27, 2018 0
நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கான வழியைக் கூறுமாறு இந்த அரசாங்கம் தன்னிடம் கோருவதாகவும், எம்மிடம் அரசாங்கத்தை ஒப்படைத்தால் தாம் அதனைச் செய்து காட்டுவோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய சமைத்த உணவில் முறைக்கேடு.

Posted by - November 11, 2018 0
கிளிநொச்சியில் கடந்த இரு சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமான சில இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியிருந்தது. இதனால் அப் பகுதிகளை சேர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து…