25ம் , 26ம் திகதிகளில் வடக்கு மாகாண ஆளுநரின் தலமையில்காணிகள் விடுவிப்பதற்கான ஏற்பாடுகள்

168 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையின் பெயரில் வடக்கு மாகாணத்தில் படையினர் வசம் உள்ள நிலங்களில் இருந்து ஒரு தொகுதி நிலங்கள் எதிர் வரும் 25ம் , 26ம் திகதிகளில் வடக்கு மாகாண ஆளுநரின் தலமையில் விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள நிலங்கள் அனைத்தும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்ததோடு மாவட்ட ரீதியில் ஆய்வினை மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை ஆளுநர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என 3வது வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணிக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் வடக்கின் ஆளுநர் 5 மாவட்டங்களிற்கும் நேரில் சென்று முதல் கட்ட அறிக்கையினை சமர்ப்பித்திருந்தார். இதன் பிரகாரம் மாவட்டந்தோறும் படையினர் உடனடியாக விடுவிக்கும் நிலங்களிற்கான ஓர் பட்டியலும் பதிலீடுகளுடன் விடுவிப்பதற்கு இணங்கும் பட்டியல் எனவும் இரு பட்டியல் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் உடனடியாக விடுவிப்பதற்காக இணக்கம் கானப்பட்ட நிலங்கள் எதிர்வரும் 25ம் 26 ஆம் திகதிகளில் வடக்கின் 5 மாவட்டத்திலும் நிலங்கள் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 25ம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் 26ஆம் திகதி கிளிநொச்சி , முல்லைத்தீவு , வவுனியா மாவட்டத்திலும் நிலங்கள் விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மன்னார் மாவட்டத்தில் இந்த மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக ஓர் திகதியில் விடுவிப்பதற்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Related Post

பராக்கிரம சமுத்திரத்தின் வான்கதவுகள் திறப்பு

Posted by - November 7, 2018 0
பொலன்னறுவை பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, பொலன்னறுவை – மனம்பிட்டிய பகுதியை ஊடறுத்து செல்லும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அத்தோடு,…

அறிக்கையை மாற்றிய சம்பந்தன்

Posted by - November 4, 2018 0
மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ரா­கச் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை கூட்­ட­மைப்பு ஆத­ரிக்­கும் முடிவை நேற்று அறி­வித்­தது. இது தொடர்­பான அறிக்கை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உயர்­மட்­டக் குழு­வின் கூட்­டத்­தில்…

உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறியாமல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது!

Posted by - November 10, 2018 0
உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில…

ஐ.நா. கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு

Posted by - October 14, 2018 0
ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கவுன்சில் உறுப்பினர் நாடாக, இந்தியா தேர்வு செய்யப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின், 193 உறுப்பினர்கள், ஐ.நா., மனித…

மூன்று மாவட்டங்களில் 17372 பேர் பாதிப்பு, 6 பேர் பலி

Posted by - October 8, 2018 0
நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் அடை மழை, காற்று என்பவற்றால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கடந்த மூன்று தினங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும்…