வடக்கு மாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் விசாரணை இன்றி இழுத்தடிப்பு

119 0

வடக்கு மாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வடக்கு மாகாண சபையினால் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பாரப்படுத்தப்பட்ட குற்றச் சாட்டுக் கோவைகள் இன்றுவரை விசாரணை நிறைவு செய்யாது இழுத்தடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நெல்சிப் திட்டத்தில் வடக்கில் 8 பிரதேச சபைகளில் பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக வைக்கப்பட்ட குற்றச் சாட்டினையடுத்து குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபைநின் தீர்மானத்தின் பிரகாரம் வடக்கு மாகாண பிரதம செயலாளரினால் ஓர் குழு அமைத்து வடக்கின் 34 உள்ளூராட்சி சபைகள் தொடர்பிலும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.

அதன் பிரகாரம் வடக்கின் 4 உள்ளூராட்சி சபைகளில் ஊழல் அல்லது மோசடி இடம்பெற்றிருப்பதாக கண்டறியப்பட்டு அது தொடர்பில் திணைக்கள ரீதியிலான ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்றன. அவ்வாறு இடம்பெற்ற ஆரம்ப விசாரணைகளில் மோசடி இடம்பெற்றதாக கண்டறியப்பட்டது.இவ்வாறு இனம் கானப்பட்ட 8 சபைகளான வல்வெட்டித்துறை நகர சபை , பருத்தித்துறை நகர மற்றும் பிரதேச சபைகள் , காரைநகர் பிரதேச சபை , பச்சிளைப்பள்ளி பிரதேச சபை வவுனியா பிரதேச சபை உள்ளிட்ட 8 சபைகளின் 2017ஆம் ஆண்டு யூன் மாதம் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு அவை யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை , கிளிநொச்சி , வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களிடம் 2017ஆம் ஆண்டு யூலை மாதம் பாரப்படுத்தப்பட்டிருந்த்து.இவ்வாறு பாரப்படுத்தப்பட்ட விபரங்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு அவற்றிற்கான குற்றப் பத்திரங்கள் தயார் செய்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலையில் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிர்ந்த ஏனைய சபைகள் தொடர்பில் பொலிசார் ஆரம்ப விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். எனினும் இன்றுவரையில் எந்தப் பொலிசாரினாலும் எந்தவொரு சபை தொடர்பிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. என விசணம் தெரிவிக்கப்படுகின்றது.நெல்சிப் திட்டத்தின் ஊடாக குறித்த சபைகளில் பல மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றதாக எழுந்த குற்றச் சாட்டினையடுத்தே விசாரணைகள் ஆரம்பித்தபோதும் இன்றுவரை எவரும் நீதியின் முன்பாக நிறுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post

பால் பக்கெட்டில் விஷம் கலக்கப்பட வில்லை

Posted by - October 9, 2018 0
கூட்டு எதிர்க் கட்சியினரால் கடந்த செப்டம்பர் 5 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது வழங்கப்பட்ட பால் பக்கெட்டுக்களில் எவ்வித விஷமும் மருந்துகளும் கலக்கப்படவில்லை…

கோத்தாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted by - October 9, 2018 0
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன்…

பைத்தியக்காரனிடம் நிறைவேற்று அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும்; மைத்திரி பதிலளித்துவிட்டார்: ஜே.வி.பி

Posted by - December 19, 2018 0
“நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவியில் பைத்தியக்காரன் ஒருவன் அமர்ந்தால் என்ன நடக்கும் என்று என்.எம்.பெரேரா எழுப்பிய கேள்விக்கு நாற்பது ஆண்டுகளின் பின்னர் மைத்திரிபால சிறிசேன பதில் கொடுத்துவிட்டார்.”…

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Posted by - October 26, 2018 0
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி…

வீர வசனம் பேசியோர் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அடம்பிடிப்பு

Posted by - December 21, 2018 0
வீரரைப் போன்று பொதுஜன பெரமுனக் கட்சியில் சேர்ந்தவர்கள் இன்று எதிர்க்கட்சி பதவி கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில் அதனை இல்லையென மறுப்பது வேடிக்கையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்…