வடக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் கீழ் உள்ள முன்பள்ளிகளிற்கான ஆசிரியர்களிற்கான நிரந்தர நியமனத்திற்கான அனுமதி ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் திணைக்களங்களின் கீழ் உள்ள முன்பள்ளிகளில் நீண்டகாலமாக நிலவும் ஆசிரிய வெற்றிடங்களிற்கு ஆசிரியர்களை நியமிப்பதற்காக 2017ஆம் ஆண்டு கோரப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து போட்டிப் பரீட்சை மூலம் 80 புள்ளிகளிற்கு மேல் தேர்வானவர்களிற்கு நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன.
அவ்வாறு இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் இருந்து செயல்முறை மற்றும் புள்ளிகளின் அடிப்படையில் கூடிய புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் உள்ளவர்களிற்கு நியமனம் வழங்குவதற்காக வடக்கு மாகாண ஆளுநரின் அனுமதிக்காக வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த்து.
இவற்றின் அடிப்படையில் குறித்த நியமனத்திற்காக அனுமதி தற்போது ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வானவர்களிற்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.