30 ஆயிரம் பேரை நிர்க்கதிக்குள்ளாக்கிய வடக்கில் பெய்த மழை

200 0

வடக்கில் பொழியும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களில் இருந்தும் 6 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 521 பேர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு பல வீதிகள் , கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு பல ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்து 52 முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 400 மில்லி மீற்றர் மரை பொழிந்தமையினால் மாவட்டத்தின் அனைத்து குளங்களும் திரம்பி வழிவதனால் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக புன்னைநீராவி , தர்ம்புரம் , கண்டாவளை , பன்னங்கண்டியை உள்ளடக்கிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. அதேபோல் நகரின் மத்தியில் உள்ள ஆனந்த புரம் கிராமத்தின் சகல வீடுகளிலும் நீர் புகுந்துவிட்டது. ஏனெனில் மழை நீர் போன்று இரணைமடு போன்ற குளங்களில் இருந்தும் கனகாம்பிகைக்குளம் , கல்மடு விசுவமடு போன்ற குளங்களில் இருந்து அதிகளவான நீர் வெளியேறுகின்றது.

இதனால் மழைநீர் வற்றுவதற்கோ அல்லது உடனடியாக வழிந்தோடவோ வழி இல்லாத காரணத்தினால் அதிக மக்கள் இடம்பெயரும் சூழல் ஏற்படுகின்றது. அதேபோன்று பலர் தமது வீடுகளை விட்டு வெளியேறவும் மறுக்கின்றனர். இதுவரையில் 28 முகாம்களில் 2 ஆயிரத்து 192 குடும்பங்கள்ளச் சேர்ந்த 7 ஆயிரத்து 52 பேர் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் பராமரிக்கப்படுகின்றனர்.

இவை அனைத்திற்கும் மத்தியில் எந்த அனர்த்தம் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்காக அணர்த்த முகாமைத்துவப் பிரிவு உள்ளிட்ட சகல தரப்பினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் மிகப் பெரும் குளமான இரணைமடுக்குளமானது அதன் கொள் அளவு 36 அடியாக உள்ள நிலையில் அதன் நீர் தற்போது 38 அடியை எட்டிப்பிடித்துள்ளமையினால் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளமையினால் அதிக நீர் ஒரே தடவையில் வெளியேறுகின்ற காரணத்தினாலும் நீர் சூழும் தன்மை கானப்படுகின்றது. என மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரிய குளங்களான முத்தையன் , வவுனிக்குளம் , உடையார் கட்டுகுளத்தின் நீர் வரத்து அதிகரித்து கானப்படுவதால் கலிங்கு ஊடாக நீர் வெளியேறுகின்றது. இதனால் குறித்த பிரதேசங்களை அண்டிய மக்கள் மிகஅவதானமாக இருக்குமாறு கேட்கப்படுகின்றனர். அதேநேரம் இதுவரை 3 ஆயிரத்து 794 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 651 பேர் முழுமையாக பாதிப்படைந்துள்ளதோடு இடம்பெயர்ந்தோர் 22 முகாம்களில் பராமரிக்கப்படுவதாக மாவடச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் கரிசல் பகுதியில் ஏற்பட்ட நீர் அதிகரிப்பின் காரணமாக 38 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் தங்க வைக கப்பட்டுள்ளதோடு மீனவர்களின் 11 படகுகளும் சேதமடைந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளபோதிலும் மருநங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக யாழ்ப்பாணம் போக்கறுப்பு வீதியின் போக்குவரத்து மருதங்கேணியுடன் பாதிப்படைந்துள்ளது. இதனால் மருதஙகேணியில் இருந்து போக்கறுப்பிற்கான 30 கிலோ மீற்றருக்கான பாதைக்கான பிரயாணம் தடைப்பட்டுள்ளது. இதேநேரம் இப் பகுதியில் இருந்து 278 குடும்பங்களைச் சேர்ந்த 708 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இதேநேரம் கண்டாவளை பிரதேச செயலாளர் அலுவலகம் , தர்ம்புரம் வைத்தியசாலை என்பனவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு பரந்தனில் இருந்து முல்லைத்தீவு செல்லும் பாதையில் பல இடங்களில் வெள்ளம் வீதியை மேவி பாய்கின்றதனால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

இவ்வாறான சேதங்களால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் , ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்த்தோடு ஆயிரக் கணக்கான ஏக்கர் நெல்லும் அழிவடைந்துள்ளது. இதேசமயம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அகப்பட்ட மக்களை 20ற்கும் மேற்பட்ட படகுகள் மூலம் கடற்படையினர் மீட்டு வந்தனர்.-

Related Post

சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானதென அறிவிக்ககோரி மனு தாக்கல்

Posted by - November 19, 2018 0
உயர்நீதிமன்றம் தடை விதித்தப் பின்னர் கலைக்கப்பட்ட பாராளுமன்றை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானமானது, சட்டவிரோதமானதென அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரியட்…

சவுதியின் ‘டுவிட்டர்’ படை! விமர்சிப்பவர்கள் மீது தாக்குதல்

Posted by - October 24, 2018 0
அரசுக்கு எதிராக சமூக வலைதளமான ‘டுவிட்டரில்’ கருத்து வெளியிடுபவர்களை ஒடுக்க, சவுதி சார்பில் தனிப்படையே செயல்பட்டு வருகிறது. சவுதி அரேபிய அரசை விமர்சித்த, அந்நாட்டு பத்திரிகையாளர் ஜமால்…

மாவீரர்தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களுக்கு எச்சரிக்கை!

Posted by - October 31, 2018 0
யாழ்.வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரை பொலிஸார் அழைத்து மிரட்டி எச்சரித்துள்ளனர். வல்வெட்டித்துறை தீருவிலில் கடந்த வருடம் மாவீரர் நாள்…

ஏமனில் வான்வழி – ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

Posted by - November 19, 2018 0
ஐ.நா கேட்டுக் கொண்டதற்கிணங்க , தாங்கள் சவூதி அரேபியா தலைமையிலான படைக்கு எதிரான வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதாக ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த…

மஹிந்தவை ஆதரிக்க நிபந்தனை வைத்த கூட்டமைப்பு ரணிலிடம் என்ன கோரியது?

Posted by - November 10, 2018 0
“நாடாளுமன்றில் ஆதரவு வழங்குவது தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நிபந்தனை விதித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வைத்த கோரிக்கைகள் என்ன?” – இவ்வாறு…