பாராளுமன்ற சம்பிரதாயப்படி எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த தான்

128 0

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை வழங்குவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டுவருவதானது பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு எதிரானது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

இப்பொழுது நாம் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளோம் என அக்கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாம் இப்போது எதிர்க் கட்சியில் அமர்ந்துள்ளோம். பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு ஏற்ப அதிகாரத்தில் இருந்துவிட்டு எதிர்க் கட்சிக்குச் சென்றவர்தான் எதிர்க் கட்சித் தலைவராக வர வேண்டும். இந்த பாராளுமன்ற சம்பிரதாயம் கூட தெரியாத நிலையில் தான் எதிர் தரப்பிலுள்ள கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்து பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக மாறி,  அதனையடுத்து 50 நாள் பிரதமராக பொறுப்பேற்று, தற்பொழுது எதிர்க் கட்சித் தலைவராக வருவதற்கான அரசியல் போராட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ இறங்கியுள்ளமை ஒரு விசேட தன்மையாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறுகிறது

Posted by - December 6, 2018 0
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அடுத்த ஆண்டு ஜூலை 3 முதல் 7-ம் தேதி வரை சிகாகோவில் நடைபெறவுள்ளது.…

பிரபாகரனின் பயணத்தை அடைவதற்காக கூட்டமைப்பு முயற்சி செய்கிறது : சிறிதரன் எம் .பி

Posted by - November 5, 2018 0
கூட்டமைப்பு பிரபாகரனின் பயணத்தை கொண்டு செல்கிறது, அதனை அடைவதற்காக முயற்சி செய்கிறது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

தரம் 5 புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு

Posted by - October 4, 2018 0
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் 500 ரூபா கொடுப்பனவை 750 ரூபாவாக…

மைத்திரி மீது சரமாரியான குற்றச்சாட்டுக்கள்

Posted by - November 7, 2018 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபாநாயகர் கரு ஜயசூரிய கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு இன்று அவசர கடிதம் அனுப்பியுள்ளார். “துப்பாக்கிகள்…

சிறப்புப் பூஜைக்காக திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன்

Posted by - November 5, 2018 0
சபரிமலை கோயில் நடை, சிறப்புப் பூஜைக்காக இன்று திறக்கப்படவுள்ளது. இதனால், நாளை வரை, பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன்…