உலகின் சிறந்த 25 இளைஞர்கள் பட்டியலில் மூன்று இந்தியர்கள்

155 0

அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘டைம்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ள, 25 வயதுக்குட்பட்ட, உலகின், 25 சிறந்த இளைஞர்கள் பட்டியலில், மூன்று, இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்.

மக்களிடையே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய, 25 வயதுக்குட்பட்ட, 25 சிறந்த இளைஞர்கள் பட்டியலை, டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவைப் பூர்வீகமாக உடைய, அமெரிக்க வாழ் இந்தியர்களான, காவ்யா கொப்பாரப்பு, ரிஷப் ஜெயின், பிரிட்டன் வாழ் இந்தியரான அமிகா ஜார்ஜ் இடம் பெற்று உள்ளனர்.

எட்டாம் வகுப்பு படிக்கும், 14 வயதான, ரிஷப் ஜெயின், புற்றுநோயைக் கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சை அளிக்கக் கூடிய, கணினி வழிமுறையை வடிவமைத்து உள்ளார்.ஹார்வர்டு பல்கலையில் படிக்கும், 18 வயதான, காவ்யா கொப்பாரப்பு, மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் திசுக்களை, கணினியில் ஆராயக்கூடிய வழிமுறைகளை வகுத்துள்ளார்.

பிரிட்டனில் படித்து வரும், 19 வயதாகும், அமிகா ஜார்ஜ், மாதவிடாய் காலத்தின் போது, அதற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாத ஏழை பெண்களுக்கு உதவும் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.

Related Post

இலங்கையில் மூக்கை நுழைக்க அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை

Posted by - November 14, 2018 0
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு அமெரிக்காவுக்கோ ஐக்கிய நாடுகள் சபைக்கோ அல்லது சர்வதேச இராஜதந்திரிகளுக்கோ உரிமை கிடையாது என ஐக்கிய நாடுகளின் சபையின் முன்னாள் இலங்கைக்கான வதிவிட…

பொதுத் தேர்தல்: வேட்பு மனு நவம்பர் 26 நண்பகல் வரை ஏற்பு

Posted by - November 10, 2018 0
ஜனாதிபதியினால் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த வேட்பு…

பொன்சேகா சொன்னதையே நானும் சொல்கின்றேன்

Posted by - October 3, 2018 0
வடக்கு, கிழக்கில் யுத்தத்தை எவ்வாறு முடிவு செய்தோம் என்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கூறிய அதே கருத்தைத் தான் தானும் கூறவேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

ரணிலிடம் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை – சம்பந்தன்

Posted by - December 13, 2018 0
ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும்…

மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி

Posted by - October 23, 2018 0
மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பு -ஜனாதிபதி மலையக மக்களுக்கு முதற்தடவையாக நிரந்தர காணி…