மூன்று நீள்விரல்கள் கொண்ட விசித்திர குள்ள உருவங்கள்!

228 0

ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பல பில்லின் ​ெடாலர்கள் செலவு செய்து ஏலியன்களை( வேற்றுக்கிரகவாசிகள்) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

ஆனால் இன்று வரை ரஷ்யாவுக்கும் ஏலியன்களுக்கும் என்ன பொருத்தமோ என்னவோ அடுத்தடுத்து ஏலியன்கள் குறித்து உண்மைகளையும், ஏலியன் விண்கலம், ஏலியன்கள் உடல் உள்ளிட்டவைகளை அந்நாடு கண்டுபிடித்துள்ளது.

கடந்த ஆண்டு நீண்ட 3 விரல்களுடன் இறந்த மனித உடலை போன்று உருவம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அது உண்மையிலேயே வேற்றுக்கிரக வாசிகள் என்று நிருபணம் ஆகியுள்ளது.

வட அமெரிக்காவின் பெரு நாட்டில் 3 நீண்ட விரல்களுடன் மனிதன் போன்று உடல் அமைப்புகளுடன் மலைப் பகுதிகளுக்கிடையே பதப்படுத்தப்பட்ட மனித உடல் கிடைத்தது. மேலும் அந்த உடல் அமைப்பு மனிதனின் உடல் அமைப்புகளில் ஒத்துப் போக கூடியதாகவும் இருந்தது. இந்த உடலில் மனிதனைப் போல் இருந்தாலும் வேறுபட்டுக் காணப்பட்டது.

இறந்த நிலையில் எலும்புக் கூடு போன்று காணப்பட்டாலும் அதில், இரண்டு கைகளிலும் 3 நீண்ட விரல்கள் இருந்தன. மேலும், கால்களிலும் 3 நீண்ட விரல்கள் இருந்தன. இது பெரும் அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாகவே காணப்பட்டது.

இந்த உடல் பெருவின் மலைப் பகுதிகளுக்கிடையே இருந்ததை கண்டுபிடித்தவர் மெக்ஸிகோவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜெமி மவ்சன். அவரால் 2007ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

மனித உடலைப் போல் காணப்பட்டாலும் அது அமர்ந்த நிலையில் இருந்தது. இரண்டு கைகளும் உடலோடு கட்டி அணைத்தபடியும், ஒருபுறம் தலை சாய்வாகவும் இருந்தது.

கால், கைகளில் 3 நீண்ட விரல்கள் இருந்தன. இதுகுறித்து விசித்தரமாக இருந்ததால் அங்கு ஏராளமான பத்திரிகையாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் குவிந்தனர். பிறகு அந்த உடல் மீட்கப்பட்டு ரஷ்யாவுக்கு கொண்டு வரப்பட்டது.

பிறகு செயின்ட் பீட்டர்பர்க் பெடரல் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் உயிரி இயற்பியல் பேராசிரியர் ​ெகான்ஸ்டன்டின் கொரோட்கோவ் இதை ஆராய்ச்சி செய்து வந்தார்.

அமர்ந்த நிலையில் 3 நீண்ட விரலுடன் இருந்த உடலை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அது மனித உடல் இல்லை என்று தெரியவந்தது. மேலும், மாறுபட்ட மனிதனைப் போல உள்ள உயிரினம் எனவும் தெரியவந்தது.

அந்த உடல் குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளும் நடத்தப்பட்டன. மேலும் மரபணு சோதனையும் (டி.என்.ஏ) நடத்தப்பட்டது. மலைப் பகுதியில் இருந்த தட்ப வெப்ப நிலை, உடல் புதைந்திருந்த பகுதி என ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது.

இதனிடையே கடந்த வாரங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் இராணுவம் பனிப்பாறைகளுக்கிடையே தோண்டிக் கொண்டிருந்தது. அப்போது ஏலியன் விண்கலம் போன்று தென்பட்டது. அதில் பழைய எழுத்துரு மானிகள், பண்டைய கால போக்குவரத்து குறியீடு போன்றும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதை ‘ஏலியன் விண்கலம்’ என்று அழைத்தனர். இதுகுறித்து ஆய்வில் நாசாவும் ஈடுபட்டு வருகின்றது.

மூன்று விரல்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட உடல் 5ம் நூற்றாண்டை சார்ந்தது எனவும். அது மனிதன் அல்ல என்றும் அது கட்டாயம் வேற்றுக்கிரக வாசியாக இருக்க முடியும் என்றும் ஆய்வு முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சைபர் கோளோடும் இந்த உடலுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசித்திரமான மனித உடல் அமைப்பு உடையவை ஏலியன்கள்தான் என்றும் பெரும்பாலும் ஒரு ஏமாற்றுத்தனமாக இருப்பதாகவும் பிரிட்டிஷ் நிபுணர் நைகல் வாட்சன் கூறினார்.

தற்போது தொழில்நுட்ப அறிவில் ரஷ்யா முன்னோடியாக இருப்பதற்கும் ஏலியன் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். ஏலியன் குறித்த கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதால் என்னவோ ரஷ்யாவுக்கும் ஏலியன்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. பனிப்பாறைகளுக்கிடையே ஏலியன் விண்கலனை கண்டுபிடித்துள்ளதால், இது முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகின்றது.

Related Post

சின்மயி திருமணத்துக்கு வைரமுத்துவை அழைத்து ஆசீர்வாதம் ஏன்?

Posted by - October 11, 2018 0
வைரமுத்து – சின்மயி பெயர்கள் சமூகவலைதளங்களையே அதிரவைத்துக்கொண்டிருக்கிறது. பாலியல் ரீதியான தொல்லையை அனுபவித்த பெண்கள் ட்விட்டரில் “மீ டூ” என்ற ஹேஷ்டேக்கில் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பகிர்ந்துவருகிறார்கள்.…

இனவாதம் பேசும் தனி நபருக்கான எதிர்ப்பு நடவடிக்கை

Posted by - January 25, 2019 0
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பாக கடந்த நாட்களில் மாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புக்களும் கையெழுத்து வேட்டைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்தவகையில் இனவாதம் பேசுகின்ற ஆளுநரை உடனடியாக…

யாழில் வீடு புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்!

Posted by - September 30, 2018 0
யாழ்ப்பாணம், மானிப்பாயில் வீடு புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு…

இலங்கையில் சதிப்புரட்சி – சர்வதேசத்திடம் சபாநாயகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Posted by - November 7, 2018 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதை ஆயுதங்களை பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதிப்புரட்சி என கூறப்படுகின்றது. சபாநாயகர் கருஜயசூரிய இந்த…

இஸ்ரேல் – பலஸ்தீன மோதலில் 8 பேர் உயிரிழப்பு

Posted by - November 14, 2018 0
காஸா எல்லையில் இஸ்ரேலிய படைகளுக்கும் பலஸ்தீன ஆயுதக்குழுக்களுக்கும் இடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரவு முதல் இதுவரை பலஸ்தீன ஆயுதக்…