தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பாரா ரணில் – சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி

160 0

ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பாரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அமெரிக்க தூதுவர், இந்திய தூதுவர் போன்றோரை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும்.

அதைவிடுத்து, ஜனநாயகம் எனும் போர்வையின் கீழ் ரணிலை ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கில் கூட்டமைப்பு ஐ.தே.க.விற்கு ஆதரவு வழங்கியுள்ளது.

ஆனால், கூட்டமைப்பு விரும்புவது போன்று ரணில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது சந்தேகமே.

ஏனெனில் அவர் அதிகாரத்தை பொறுப்பேற்றவுடன் சரியான அரசாங்கம் அமைக்கப்படும் என்றோ அல்லது அவரது செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த எதிர்க்கட்சிகள் இடமளிக்கும் என்றோ உறுதியாக எதிர்பார்க்க முடியாது” எனத் தெரிவித்தார்

Related Post

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வந்த சோதனை

Posted by - December 23, 2018 0
சமகால அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய…

நாட்டிலிருந்து பெறும் பயன்களை நாட்டுக்கு வழங்க வேண்டும்

Posted by - October 3, 2018 0
எமது தாய் நாடு உலகின் பாராட்டைப் பெறும் விடயங்களுள் முக்கிய இடத்தை வகிப்பது இலவசக் கல்வியும் இலவச சுகாதார சேவையுமே ஆகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

Posted by - November 16, 2018 0
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுக்காக இன்று வருகை தரும் உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளின் பின்னரேயே அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.…

ஏமனில் வான்வழி – ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

Posted by - November 19, 2018 0
ஐ.நா கேட்டுக் கொண்டதற்கிணங்க , தாங்கள் சவூதி அரேபியா தலைமையிலான படைக்கு எதிரான வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதாக ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த…

வான்கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்

Posted by - October 4, 2018 0
மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மல நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் நேற்று  மாலை 3 மணியளவில்…