மகிந்த பதவி விலகினால் அமைச்சர்களின்நிலை என்ன ?

109 0

சிறிலங்காவின் பிரதமராக கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் நியமிக்கப்பட்ட, மகிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையுடன், பதவியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர்  மகிந்த ராஜபக்ச, நேற்றிரவு  விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தில், கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இந்தக் கூட்டத்தில், கருத்து வெளியிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள்,  அரசாங்கத்தில் இருந்து விலகி,  எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்றே வலியுறுத்தியிருந்தனர்.

எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று நடத்தப்படும் விசாரணைகளில் அளிக்கப்படும் உத்தரவுக்குப் பின்னரே இறுதி முடிவை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நேற்று மாலை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post

பாராளுமன்றத்தைக் கலைத்து உடன் பொதுத் தேர்தலுக்குச் செல்லுங்கள்

Posted by - November 9, 2018 0
பாராளுமன்றத்தைக் கலைத்து உடன் பொதுத் தேர்தலுக்குச் செல்வதே தற்போதுள்ள அரசியல் பதற்ற நிலைக்கு தீர்வாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. தம்புள்ளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

ரயில்வே கட்டணங்கள் அதிகரிப்பு

Posted by - September 28, 2018 0
ரயில் கட்டணத்தை எதிர்வரும் திங்கட்கிழமை (01) முதல் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. திறைசேரியின் ஆலோசனைக்கமைய ரயில்வே திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த…

பனிப்புயலில் சிக்கிய 9 மலையேறிகளின் உடல்கள் மீட்பு

Posted by - October 15, 2018 0
நேபாளத்திலுள்ள இமயமலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீசிய கடுமையான பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த ஒன்பது மலையேறிகளின் உடல்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட மலையேற்றக்…

25ம் , 26ம் திகதிகளில் வடக்கு மாகாண ஆளுநரின் தலமையில்காணிகள் விடுவிப்பதற்கான ஏற்பாடுகள்

Posted by - December 23, 2018 0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையின் பெயரில் வடக்கு மாகாணத்தில் படையினர் வசம் உள்ள நிலங்களில் இருந்து ஒரு தொகுதி நிலங்கள் எதிர் வரும் 25ம் , 26ம்…

இலங்கையின் முன்னாள் எம்.பிக்கு மரணதண்டனை

Posted by - October 12, 2018 0
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட மூன்று பேரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை அடுத்து, அவரது உறவினர்கள் துமிந்த சில்வாவை கட்டி அணைத்து…